Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 310 மற்றும் எக்ஸ்ட்ரீம் 310 ஸ்பை படங்கள் வெளியானது

Hero Motocorp xpulse

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 310 மற்றும் எக்ஸ்ட்ரீம் 310 என இரண்டு பைக் மாடல்களை சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

சோதனை ஓட்டத்தில் உள்ள பைக்குகளில் கரீஸ்மா XMR 210cc பைக்கில் உள்ள லிக்யூடு கூல்டு என்ஜினை காட்டிலும் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது.

Hero Xpulse 310

சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் மாடல் 210சிசி அல்லது 440சிசி என்ஜின் அல்லாமல் இரண்டுக்கும் நடுவில் புதிய 300சிசி என்ஜினை பெறக்கூடும்.

அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 310 பைக்கில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் 21 அங்குல முன்புற ஆலாய் வீல் மற்றும் பின்புறத்தில் 19 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.

ஆனால், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற எக்ஸ்ட்ரீம் 310 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் உள்ளது. இதில் இரண்டு பக்கமும் 17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது.

இரண்டு பைக் மாடல்களும் லிக்யூடு கூல்டு என்ஜினை பகிர்ந்து கொள்ளலாம்.

சமீபத்தில் வந்த புதிய கரீஸ்மா எக்எஸ்எம்ஆர் லிக்யூடு கூல்டு என்ஜின்,  6 ஸ்பீடு கியர்பாக்ஸ் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க வசதிகள் பெற்றதாக அமைந்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 310 மற்றும் எக்ஸ்ட்ரீம் 310 அடுத்து ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாகலாம்.

Image source – man.vs.tarmac / Instagram

Exit mobile version