Automobile Tamilan

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 டீசர் வெளியானது.!

2025 hero xpulse 421 teased

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகம் அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் 421 மாடல் வருகின்ற 2025 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது துவக்க மாதங்களில் இந்த மாதங்களில் அறிமுகம் குறித்தான முக்கிய விபரங்கள் மற்றும் முழுமையாக காட்சிப்படுத்த 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம் அதற்கு முன்பாக தற்பொழுது டீசர் EICMA 2024ல் வெளியாகி இருக்கின்றது.

குறிப்பாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டேக்கர் ரேலியில் தொடர்ந்து மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கி வருகின்ற நிலையில் இந்த ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து தற்பொழுது 250cc எக்ஸ்ட்ரீம் , கரீஸ்மா XMR , எக்ஸ்பல்ஸ் 210 போன்ற மாடல்களை EICMAவில் காட்சிப்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள டீசரில் 421சிசி ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல் ஆனது அதிகபட்சமாக பவர் 45 முதல் 48 ஹெச்பி வரை பவர் வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் டார்க் 45 Nm வரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடல் மிகச் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையிலும் அதே நேரத்தில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுவதனால் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றதாக அமையும் குறிப்பாக 300 முதல் 500சிசி வரை உள்ள பல்வேறு அட்வென்ச்சர் ஆக மாடல்களுக்கு மிகக் கடும் சவாலினை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

image – powerdrift

Exit mobile version