Automobile Tamilan

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு காத்திருப்பு காலம்..?

xtreme 125r

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 125R பைக் பற்றி முதன்முறையாக நாம் தான் படத்தை வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் இந்த பைக்கிற்கு வரவேற்பு மிக அமோகமாக உள்ளதை தொடர்ந்து தற்பொழுது இந்த மாடலை டெலிவரி பெற 15 முதல் 30 நாட்கள்  வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை, பெங்களூரு, மும்பை  உள்ளிட்ட சில முன்னணி மெட்ரோ நகரங்களில் 10 முதல் 15 நாட்கள் என சொல்லப்படுகின்ற காத்திருப்பு காலம் ஒரு சில ஊரக பகுதி டீலர்களிடம் ஒரு மாத வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக சில வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், மாடலின் உற்பத்தியை சமீபத்தில் தான் இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1000 யூனிட்டுகளாக அதிகரிக்க திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் 125சிசி செக்மெண்டில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் காத்திருப்பு காலம் கொண்ட ஒரே மாடலாக  ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மாடல் தற்பொழுது விளங்குகின்றது.

மிக ஸ்போர்ட்டிவான தோற்றத்துடன் ஆக்ரோஷமான எல்இடி ஹெட்லைட், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றுள்ள எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கில் புதுப்பிக்கப்பட்ட  124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்நிறுவனம் லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவித்துள்ளது.

(All Price Ex-Showroom Tamil Nadu and Pondicherry)

மேலும் படிக்க ; 125சிசி ஸ்போர்ட்டிவ் பைக்குகளின் ஆன்ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

Exit mobile version