Automobile Tamilan

EICMA 2023ல் ஹீரோ ஜூம் 125 அல்லது Xude ஸ்கூட்டர் நாளை அறிமுகமாகிறது

Hero Xoom 125 or Xude

ஹீரோ மோட்டோகார்ப் தனது சமூக ஊடகப் பக்கங்களில் மீண்டும் மற்றொரு புதிய ஸ்கூட்டர் மாடல் குறித்தான வருகையை டீசர் மூலம் உறுதிப்படுத்திய நிலையில் இதன் பெயர் ஜூம் 125 அல்லது Xude என்று அழைக்கப்படலாம்.

நவம்பர் 7 முதல் துவங்குகின்ற EICMA 2023 மோட்டார் கண்காட்சியில் ஜூம் 160 மேக்ஸி அட்வென்ச்சர் ஸ்டைல் ஸ்கூட்டர், விடா எலக்ட்ரிக் வரிசை மற்றும் பிரீமியம் ஹீரோ 440சிசி பைக்குகள் வெளியிடப்படலாம்.

Hero Xoom 125 or Xude

பொதுவாக ஹீரோ தனது பைக் மற்றும் ஸ்கூட்டர் வரிசைக்கு X என துவங்கும் பெயர்களை  பயன்படுத்தி வரும் நிலையில், அடுத்த 125சிசி மாடல் ஜூம் 125 அல்லது ஜூட் என அழைக்கப்படலாம்.

வெளியிடப்பட்டுள்ள டீசரில் “Ultimate Urban Commuter” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளாதல் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தன்மையை கொண்டதாக டீசர் மூலம் தோற்றம் வெளியாகியுள்ளதால் ஜூம் 110 ஸ்கூட்டரை விட ஸ்போர்ட்டிவாக அமைந்துள்ளதால் Xude என குறிப்பிடப்படலாம்.

புதிய அப்ரான், மிக நேர்த்தியாக H  வடிவத்தை நினைவுப்படுத்துகின்ற எல்இடி ஹெட்லைட், எல்இடி டர்ன் இண்டிகேட்டர் உள்ளன. மற்றபடி, பக்கவாட்டில் உள்ள பேனல்களும் ஸ்போர்ட்டிவாக அமைந்திருக்கின்றது.

9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த என்ஜினை ஹீரோ  Xude 125 பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. கூடுதலாக ஹீரோ நிறுவனம், சமீபத்தில் Xude என்ற பெயரை காப்புரிமை கோரியுள்ளது.

 

Exit mobile version