Categories: Bike News

110 சிசி ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிட்ட ஹோண்டா

activa 6g

110 சிசி சந்தையில் கிடைக்கின்ற ஆக்டிவா மாடலின் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் ஆரம்ப விலை ரூ .63,912 தொடங்குவதுடன், டீலக்ஸ் டாப் வேரியண்ட் ரூ .65,412 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாகவே இந்நிறுவனத்தின் ஆக்டிவாவின் 125சிசி மாடல் கிடைத்து வருகின்றது.

 பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான எஸ்பி 125 மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் இடம்பெற்ற ஹோண்டாவின் esp (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாக ஆக்டிவா 6G மாடலும் வரவுள்ளது.

முழுமையான எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் போன்றவற்றுடன் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெறுவதுடன், அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

ஆக்டிவா 5ஜி மாடலை விட 6ஜி ஸ்கூட்டரின் நீளம் உயரம் மற்றும் அகலம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் வீல்பேஸ் முந்தைய மாடலை விட 22 மிமீ வரை அதிகரிக்கப்பட்டு 1260 மிமீ வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாடல் ஹோண்டா Activa 6G ஹோண்டா Activa 5G
நீளம் 1,833 mm 1,761 mm
அகலம் 697 mm 710 mm
உயரம் 1,156 mm 1,158 mm
வீல்பேஸ் 1,260 mm 1,238 mm

 

ஹோண்டாவின் ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 என இரு மாடல்களும் பிஎஸ்6 முறையில் 60,000க்கு அதிகமான வாகனங்களை விநியோகம் செய்துள்ளது. விற்பனையில் கிடைத்த பிஎஸ்4 மாடலை விட ரூ.7,500 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மாருதி சுசூகி சிறப்பு எடிசனை கிராண்ட் விட்டாராவில் வெளியிட்டது

2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எட்டியதை தொடர்ந்து ஸ்டைலான அதிகாரத்தை குறிக்கும் வகையில்…

5 hours ago

அக்டோபர் 17ல்.., இந்தியாவில் கவாஸாகி KLX 230 S அறிமுகமாகிறது..!

சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில்…

6 hours ago

530கிமீ ரேஞ்சு.., BYD ‘eMax 7’ எலெக்ட்ரிக் எம்பிவி விற்பனைக்கு வெளியனது

6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டுள்ள பிஓய்டி நிறுவனத்தின் eMax 7 எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 55.4kwh மற்றும் 71.8Kwh…

8 hours ago

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…

3 days ago

புதிய வேரியண்ட் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகனில் அறிமுகமானது

ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…

3 days ago

2024 நிசான் மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…

3 days ago