Automobile Tamilan

6G பெயரை கைவிட்டு ஹோண்டா ஆக்டிவா என்றே அழைக்கப்படும்

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா மாடலின் பெயருக்கு பின்னால் இணைக்கப்பட்ட 6G என்பதனை கைவிட்டுள்ளது. எனவே, அடுத்து ஆக்டிவா 7G என பெயரிடப்படாமல் இனி புதிய ஆக்டிவா என்றே வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் ஸ்கூட்டர்களில் ‘G’ என்ற எழுத்தானது 2015 ஆம் ஆண்டில் ஆக்டிவா 3G உடன் தொடங்கியது. ஆக்டிவாவின் இன்ஜின் 109cc வரை சென்றபோது குறிப்பிடத்தக்க மேம்பாடாக இருந்தது. அதன் தற்போதைய மாடல் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் – ஆக்டிவா 6G என பெயரிடப்பட்டு  BS6 விதிமுறைகளுக்கு இணங்க மாற்றப்பட்ட போது இந்த பெயர் வந்தது.

இனி வரும் காலங்களில் ஹோண்டா ஆக்டிவாவின் அடுத்தடுத்த மேம்பாடுகள் அவற்றின் அறிமுக ஆண்டுக்கு ஏற்ப பெயரிடப்படும்.

2023 Honda Activa

ஆக்டிவாவின் 109.51cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7.72 bhp @ 8000 rpm-லும் மற்றும் டார்க் 8.90 Nm @ 5500 rpm-ல் வழங்குகின்றது.

ஸ்டாண்டர்டு வேரியண்டில் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், ஒற்றை பின்பக்க ஸ்பிரிங் மற்றும் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் போன்றவற்றை தக்க வைத்துக் கொள்ளுகிறது.

H-smart எனப்படுகின்ற ரிமோட் மூலம் இயங்கும் வசதி கொண்ட வேரியண்ட் STD மற்றும் DLX என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட் கிடைக்கின்றது.

2023 Honda Activa
என்ஜின் (CC) 109.51 cc
குதிரைத்திறன் 7.72 bhp @ 8000 rpm
டார்க் 8.90 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

2023 ஹோண்டா ஆக்டிவா ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஹோண்டா ஆக்டிவா STD – ₹ 93,985

ஹோண்டா ஆக்டிவா DLX – ₹ 96,150

ஹோண்டா ஆக்டிவா H-smart – ₹ 1,00,456

(ஆன்-ரோடு தமிழ்நாடு)

Exit mobile version