Automobile Tamilan

ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டர் முன்பதிவு ஆரம்பம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா நிறுவனத்தின் கிரேசியா ஸ்கூட்டர் மாடலுக்கு டீலர் வாயிலாக ரூ.2000 முன்பணமாக செலுத்தி இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டர்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் அபரிதமான பங்களிப்பை பெற்று விளங்கும் இந்நிறுவனம் சமீபத்தில் கிராமப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற ஹோண்டா கிளிக் ஸ்கூட்டரை வெளியிட்டிருந்த நிலையில், அடுத்தப்படியாக நகரத்தில் வாழும் மக்களுக்கு ஏற்ற அம்சத்துடன் ஸ்டைலிஷான் தோற்ற பொலிவினை கொண்டதாக கிரேஸியா அறிமுகம் செயப்பட உள்ளது.

டிசைன்

Advanced Urban Scooter என்ற நோக்கத்தை கொண்டு மிக நவீனத்துவமான தோற்ற பொலிவினை வழங்கும் வகையில் முகப்பில் இரட்டை பிரிவு ஹெட்லைட் பெற்றதாகவும் வெளியாகியுள்ள படத்தில் நீலம் மற்றும் கருப்பு என இரு நிற கலவை கொண்டதாக கம்பீரமான பொலிவினை வெளிப்படுத்துகின்றது. தாரளமான இடவசதி கொண்ட ஃபுளோருடன் கூர்மையான எட்ஜினை பெற்றிருக்கின்றது.

எஞ்சின்

கிரேசியா ஸ்கூட்டர் மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் பற்றி எவ்விதமான உறுதியான தகவலும் வழங்கப்படவில்லை, எதிர்பாரர்க்கப்படும் எஞ்சின் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில்  8.52  ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் ஹெச்இடி என்ஜின் இடம்பெற்றிருக்கலாம் அல்லது 150சிசி எஞ்சினை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு

முன்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் ஹோண்டாவின் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (Combi Brake System- CBS) இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். மேலும் சரிவான இடங்களில் கிரேஸியா ஸ்கூட்டரை நிறுத்துவதற்கு உதவும் வகையில் பார்க்கிங் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

வசதிகள்

ஸ்டைலிஷான அர்பன் ஸ்கூட்டராக விளங்கும் கிரேசியா மாடலில் உள்ள முன்புற அப்ரான் பகுதியில் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் வசதி, மொபைல் சார்ஜிங் போர்ட், கீ அருகாமையில் இருக்கையை திறக்கும் வகையிலான அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு

இன்று முதல் நாட்டில் உள்ள ஹோண்டா டீலர்கள் வாயிலாக கிரேசியா ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்படுகின்றது.

விலை

நவம்பர் முதல் வாரத்தில் விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டர் விலை ரூ.65,000 ஆரம்பத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version