ஹோண்டா ஹைனெஸ் CB350 கஃபே ரேசர் டீசர் வெளியானது

வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 பைக்கின் அடிப்படையில் கஃபே ரேசர் ரக மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் கிடைத்து வருகின்ற ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மாடல் கிளாசிக் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலை பெற்று ரெட்ரோ தோற்ற அமைப்பில் ராயல் என்ஃபீல்டு, ஜாவா பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் மற்றொரு ரெட்ரோ ஸ்டைல் டீசரை வெளியிட்டுள்ளது.

சிபி 350 பைக்கில் உள்ள அதே 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினை இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் உட்பட இருக்கையின் மாறுபட்ட அமைப்பு கஃபே ரேசர் அல்லது ஸ்க்ராம்ப்ளர் மாடலுக்கு இணையாக அமைந்திருக்கின்றது. பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் கொண்டிருக்கலாம்.

வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால், தற்போது கிடைத்து வருகின்ற ஹைனெஸ் சிபி 350 மாடலை விட ரூ. 15,000 வரை கூடுதலாக அமைந்து, அனேகமாக ரூ.2.20 லட்சம் ஆக நிர்ணையிக்கப்படலாம்.

Share
Tags: Honda CB350