Automobile Tamilan

19 கிமீ ரேஞ்சு.., ஹோண்டா மோட்டோகாம்பேக்டோ மினி ஸ்கூட்டர் அறிமுகம்

honda motocompacto

ஹோண்டா அறிமுகம் செய்துள்ள மோட்டோகாம்பேக்டோ மினி ஸ்கூட்டர் தனிநபர் நகர பயன்பாட்டிற்கு ஏற்றதாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கேயும் எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பினை கொண்டு வெறும் 19 கிலோ எடை மட்டும் கொண்டுள்ளது.

ஹோண்டா அமெரிக்கா பொறியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள மாடலுக்கு 32க்கு மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் $995 (சுமார் ரூ.82,000) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Honda Motocompacto

490 வாட்ஸ் பவர் வெளிப்படுத்துவதுடன் 16Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ள மோட்டோகாம்பேக்ட்டோ ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம 24kph வழங்குகிறது. இதன் 6.8Ah பேட்டரி பேக்கிலிருந்து19 கிமீ ரேஞ்சு வழங்கும் என ஹோண்டா கூறுகிறது. ஆன்-போர்டு சார்ஜரைப் பயன்படுத்தி, 15-ஆம்ப் அவுட்லெட்டில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய 3.5 மணிநேரம் ஆகும்.

மடக்கும் வகையில் சிறிய சூட்கேஸ் போன்ற வடிவமைப்பினை பெற்றுள்ள இ ஸ்கூட்டரில் சிறிய அளவிலான டயர், சிறிய கைப்பிடிகள், சைடு ஸ்டாண்டு பெற்று ஒற்றை இருக்கையுடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் உள்ளது.  கார்களின் பூட்டில் இலகுவாக மடித்து வைத்துக் கொள்ளலாம்.

Exit mobile version