Automobile Tamil

புதிய ஹோண்டா நவி சிபிஎஸ் பிரேக்குடன் வெளிவந்தது

மோட்டோஸ்கூட்டர் பிரிவில் வெளியான ஹோண்டா நவி ஸ்கூட்டரில் அடிப்படையான சிபிஎஸ் பிரேக் பாதுகாப்பு அம்சத்தை ஹோண்டா டூ வீலர் இணைத்துள்ளது. இதனால் ரூபாய் 1,796 வரை நவி மாடலின் விலை உயர்ந்துள்ளது.

ஹோண்டா நவி சிபிஎஸ் பிரேக்

மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என இரு பிரிவுகளின் வடிவத்தை பின்பற்றி வெளியிடப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் நவி ஸ்கூட்டர் அறிமுகத்தின் போது இருந்த வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை.

கம்பைன்டு பிரேக்கிங் அம்சத்தை தவிர வேறு எந்த மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. சிபிஎஸ் எனப்படுவது பின்புற பிரேக்கினை இயக்கும்போது முன்புற பிரேக்கும் இணைந்து செயல்பட்டு சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும்.

110சிசி என்ஜின் 8 bhp பவரையும், 8.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினை ஆக்டிவா ஸ்கூட்டரிலும் இந்நிறுவனம் பயன்படுத்துகிறது.

வருகின்ற ஏப்ரல் 1 முதல் 125சிசிக்கு குறைந்த பைக்குகளில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்குகளை 125சிசிக்கு மேற்பட்ட பைக்குகளில் பொருத்துவது கட்டாயமாகும்.

ஹோண்டா நவி சிபிஎஸ் விலை ரூபாய் 47,110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சிபிஎஸ் அல்லாத மாடலை விட ரூபாய் 1796 வரை உயர்ந்துள்ளது.

Exit mobile version