ஹோண்டா NX500 பைக்கின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன் ரோடு விலை

honda nx500

ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள புதிய NX500 அட்வென்ச்சர் ரக மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் புதிய மாடல் ரூ.5.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் துவங்குகின்ற மாடலின் சிறப்பு அம்சங்கள் மற்றும் ஆன் ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

Honda NX500

முந்தைய CB500X மாடலுக்கு மாற்றாக வந்துள்ள புதிய ஹோண்டா NX500 பைக்கில் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் தோற்ற அமைப்பில் கவர்ந்திழுக்கும் வகையிலான எல்இடி ஹெட்லைட் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டு உயரமான விண்ட்ஷீல்டு, மாற்றப்பட்ட பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன் கொண்டதாக அமைந்துள்ளது.

மேல்நோக்கி அமைந்துள்ள எக்ஸ்ஹாஸ்ட் பெற்ற என்எக்ஸ் 500 பைக்கில் கிராண்ட் பிரிக்ஸ் ரெட், மேட் கன்பவுடர் பிளாக் மற்றும் பேர்ல் ஹொரைசன் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் மட்டும் கிடைக்கின்றது.

என்எக்ஸ்500 என்ஜின் விபரம்

ஹோண்டா NX500 பைக்கில் இடம்பெற்றுள்ள 471cc பேரலல் ட்வின் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,600rpm-ல் 47.5 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 43.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கம் 296mm  ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 240mm டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. டயர் 110/80R 19M/C (59H) மற்றும் பின்புறத்தில் 160/60R 17M/C (69H) கொண்டுள்ளது.

17.5 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள NX500 பைக்கின் கெர்ப் எடை 196 கிலோ ஆகும்.  5 அங்குல TFT டிஸ்பிளே உடன் ப்ளூடூத் உடன் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை ஹோண்டா Roadsync மூலம் பெறுகின்றது.  Roadsync ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிற்கும் செயல்படும் நிலையில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் முதல் அழைப்புகளை நிர்வகித்தல் மற்றும் இசையை கேட்கலாம்.

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற பெனெல்லி TRK 502X, கவாஸாகி வெர்சிஸ் 650 என இரு மாடல்களுக்கு சவால் விடுவதுடன், இந்திய சந்தையில் கிடைக்கின்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ஆகியவற்றையும் எதிர்கொள்ளுகின்றது.

ஹோண்டா NX500 பைக்கின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ. 6.86 லட்சம் ஆகும்.