வாக்களித்தால் இலவச சர்வீஸ், வாக்களிப்பது எப்படி %23இந்தியா விழிப்புணர்வு டூடுல்..,

0244a hero xtreme 200r

பாராளுமன்ற தேர்தல் 2019-யை முன்னிட்டு நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தேர்தலை முன்னிட்டு வாக்களித்திருந்தால் ரூ.199 கட்டணத்தில் சர்வீஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் கூகுள் நிறுவனம், வாக்களிப்பது எப்படி ? %23இந்தியா என்ற சிறப்பு டூடுலை வெளியிட்டது. அது போல மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹீரோவும் புதிய விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்

தமிழகம் மற்றும் புதவையில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிந்த அடுத்த இரண்டு நாட்கள் மட்டும் இந்த சர்வீஸ் கேம்பை ஹீரோ வழங்க உள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த கேம்ப் தேர்தல் தேதிக்குப் பிறகு இரண்டு நாட்கள் கிடைக்கும்.

இதனை பெற தேர்தல் முடிந்த அடுத்த இரு நாட்களுக்குள் அருகாமையில் உள்ள ஹீரோ ஷோரூமில் உங்கள் ஹீரோ பைக்கினை சர்வீஸ்க்கு கொண்டு செல்லுங்கள். அங்கு ரூ. 199 விலையில், இலவச வாட்டர் வாஷ் மற்றும் ஜெனரல் சர்வீஸ் வழங்கப்பட உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள், தாங்கள் கையில் வாக்களிக்கும் போது விரலில் வைக்கப்படும் மையினை அத்தாட்சியாக காண்பித்தால் போதுமானதாகும் என ஹீரோ செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version