ரூ.20,000 வரை கவாஸாகி பைக்குகள் விலை உயருகின்றது

Bs 6 Kawasaki Z900

ஜனவரி 2021 முதல் கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளின் விலை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.20,000 வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற KLX வரிசை பைக்குகளின் விலை உயர்வு குறித்து எந்த தகவலும் இல்லை.

பொதுவாக அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தங்களுடைய வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்த துவங்கியுள்ளன. குறிப்பாக இரு சக்கர வாகன சந்தையில் ஹீரோ மட்டுமே அறிவித்திருந்த நிலையில், இப்போது கவாஸாகி நிறுவனமும் இணைந்துள்ளது.

கவாஸாகி வெர்சிஸ் 1000 மற்றும் இசட்900 என இரு மாடல்களும் அதிகபட்சமாக ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.

பைக்குகள் பழைய விலை விலை வித்தியாசம்
Kawasaki Z650 ரூ.5,94,000 ரூ.6,04,000 ரூ.10,000
Kawasaki Vulcan ரூ.5,79,000 ரூ.5,94,000 ரூ.15,000
Kawasaki Versys 650 ரூ.6,79,000 ரூ. 6,94,000 ரூ.15,000
Kawasaki Ninja 650 ரூ.6,24,000 ரூ.6,39,000 ரூ.15,000
Kawasaki W800 ரூ.6,99,000 ரூ.7,09,000 ரூ.10,000
Kawasaki Z900 ரூ.7,99,000 ரூ.8,19,000 ரூ.20,000
Kawasaki Ninja 1000 SX ரூ.10,89,000 ரூ.11,04,000 ரூ.15,000
Kawasaki Versys 1000 ரூ.10,99,000 ரூ.11,19,000 ரூ.20,000

 

2021 ஆம் ஆண்டில் கவாஸாகி விற்பனைக்கு வெளியிட உள்ள ரெட்ரோ ஸ்டைல் கொண்ட பட்ஜெட் விலை W175 பைக் மீதான எதிர்பார்ப்பு பரவலாக அதிகரித்துள்ளது.

Exit mobile version