அமெரிக்க மோட்டர் சைக்கிள் தயாரிப்பாளரான இந்தியன் மோட்டார் சைக்கிள், இந்திய மார்க்கெட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய பைனாஸ் வசதிகளை அளிக்க ஹெச்டிஎப்சி வங்கியுடன் பார்ட்னராக இணைந்துள்ளது. இந்த இணைப்பின்படி, இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு வரையறுக்கப்பட்ட கால சலுகையாக ஹெச்டிஎப்சி வங்கி, 7.99 சதவிகிதம் வட்டியுடன், 85 சதவிகித லோன் வசதியை மூன்றாண்டு காலகெடுவில் அளிக்க உள்ளது.
இந்த புதிய சலுகை இந்த ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டுமே. வாடிக்கையாளர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் இந்த சலுகை பயன்படுத்தி இந்தியன் மோட்டர்சைக்கிள்களை வாங்கலாம். இந்தியன் மோட்டர்சைக்கிள் வகைகள், இந்தியாவின் புதுடெல்லி, பெங்களுரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், சண்டிகர், குவஹாத்தி மற்றும் விரைவில் ஜெய்ப்பூர் / கோச்சின் ஆகிய இடங்களில் கிடைக்கும்.
இதுகுறித்து பொலாரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ் துபே பேசுகையில், ஹெச்டிஎப்சி வங்கியுடன் பார்ட்னராக இணைந்து புதிய கவர்ந்திழுக்கும் பைனான்ஸ் சலுகைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு மோட்டார்சைக்கிளை வாங்க இந்த சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது உதவிகரமாக இருக்கும். எங்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் திட்டத்தின் மூலம் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்ஷிப்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆடம்பரமான மற்றும் வசதிகள் கொண்ட இந்தியன் மோட்டார்சைக்கிள்களை வாங்குவது, தற்போது எளிதான ஒன்றாக மாறியுள்ளது. இந்த சலுகை, இன்சியல் டவுன் பேமென்ட் 2 லட்சம் ரூபாய் செலுத்தி வாங்கும் இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி, மற்றும் இந்திய ஸ்கவுட் மற்றும் இந்திய ஸ்கவுட் பாபர் வகை மோட்டார் சைக்கிள்களுக்கும் கிடைக்கும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள டீலர்ஷிப்களில், தற்போது இந்தியன் மோட்டர்சைக்கிள், 11 தயாரிப்புகள் கிடைக்கிறது. தற்போதைய தயாரிப்புகள் வகைகள், இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி வகை 10.99 லட்ச ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்தியன் ஸ்கவுட் பாபர் வகைகள் 11.99 லட்ச ரூபாய் விலை முதல் தொடங்குகிறது. இந்திய ஸ்கவுட் வகை 12.69 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதை தொடர்ந்து, இந்தியன் சிப் டார்க் ஹார்ஸ் வகைகள் 18.81 லட்ச ரூபாய் விலையிலும், இந்தியன் சிப் கிளாசிக் வகை பைக்குகள் 21.29 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் சிப் விண்டேஜ் மற்றும் இந்தியன் ஸ்பிரிங்பீல்டு பைக்குள் முறையே 25.32 லட்ச ரூபாய் மற்றும் 33.50 லட்ச ரூபாயில் விற்பனையாகிறது. இந்தியன் சிப்டெய்ன் டார்க் ஹார்ஸ் மற்றும் இந்தியன் சிப்டெய்ன் வகைகள் முறையே 29.99 லட்சம் மற்றும் 32.01 லட்ச விலைகளில் கிடைக்கிறது. இந்தியன் ரோட்மாஸ்டர் 37.31 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேற்கூறிய விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலைகளாகும்.
சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய 'ZEO' எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52…
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…
இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…
எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…