புதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை ஈரான், துருக்கியில் வெளியிட உள்ளது ஹீரோ மோட்டார் கார்ப்

ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் புதிய ஸ்கூட்டர்கள், பைக்குகளை அறிமுகம் செய்ய இந்தியாவின் பெரிய டுவீலர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகளவிலான தயாரிப்புகளை விரிவு படுத்தும் நோக்கில் வங்கதேச தொழிற்சாலையை பயன்படுத்தி தெற்கு ஆசியா நாடுகளுக்கு தேவையான தயாரிப்புகளை மேற்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது,

உள்கவில் 37 நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், விலையில் அதிகளவில் போட்டி நிலவும் ஆப்பிரிக்க மார்க்கெட்டில் தனித்துவமான சவால்களை மேற்கொண்டு புதிய வாகனங்களை விபரணை செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 2017-18ம் ஆண்டு அறிக்கையை அளித்த ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவன உயர்அதிகாரி முன்ஜால் தெரிவிக்கையில், உலகளவிலான விற்பனையை விரிவாக்க முடிவு செய்துளோம் என்றார்.

இந்த நிறுவனம் உலக மார்க்கெட்டில் 2017-18ம் ஆண்டில் 2,04,484 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் விற்பனையான 1,82,117 யூனிட்களை அதிகமாகும்.

வெளிநாட்டு விரிவாக்கம் குறித்து பேசிய நிறுவன் அதிகாரி, துருக்கி மற்றும் ஈரான்ப் உள்பட மத்திய நாடுகளில் புதிய தயாரிப்புகளை விற்பனை செய்தய திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version