ஜாவா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 350 பைக்கினை வெளியிட்டிருந்த நிலையில் கூடுதலாக புதிய நீல நிறத்தை மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வந்த ஜாவா 350 ஆனது மரூன், பிளாக் மற்றும் ஆரஞ்ச் என மூன்று நிறங்களுடன் விற்பனைக்கு வெளியானது. இந்த புதிய நிறம் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பைக்கில் மூன்று விதமான வண்ண கலவையை கொண்டு குரோம் பூச்சூ மற்றும் நீல நிறத்துடன் கூடுதலாக கோல்டன் பின்ஸ்ட்ரிப்கள் பெற்று மோட்டார் சைக்கிளுக்கு கூடுதல் கவர்ச்சியை ஜாவா ரசிகர்களுக்கு வழங்குகின்றது.
2024 Jawa 350 பைக்கின் விலை ₹ 2,14,950 (எக்ஸ்ஷோரூம்)
புதிய நிறம் குறித்த அறிமுக தகவலை தற்பொழுது ஜாவா உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளதால் விரைவில் போட்டியாளர்களான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹோண்டா CB350 பைக்குகளை எதிர்கொள்ள உள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…