Automobile Tamilan

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

New jawa 42 teaser

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அடுத்ததாக மீண்டும் 42 பைக் வரிசையில் புதியதாக சில வேரியண்ட் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையில் உள்ள 42 பைக்கின் அடிப்படையில் சில மேம்பாடுகள் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட J-PANTHER என்ஜின் கொடுக்கப்பட்டிருந்தது.

வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் 42 என்ற எண் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பது குறித்தான எந்த ஒரு தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் வெளியான புதிய 42 பைக்கில் உள்ள பல்வேறு நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட எஞ்சின் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இதனுடைய விலையில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு ரூ.1.73 லட்சம் முதல் துவங்குகின்றது.

செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த மாடலின் விலை அறிவிக்கப்பட்டு மற்றும் முழுமையான விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version