Categories: Bike News

90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி

ஜாவா ஸ்பெஷல் எடிஷன்

1929 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 500 OHV மாடலை நினைவுப்படுத்தும் வகையில் 90ஆம் ஆண்டு  ஜாவா பைக் சிறப்பு மாடலை இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு மாடல் 90 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுமே ஜாவா ஸ்பெஷல் எடிஷன் பைக்கினை பெற தகுதியுடைவர்களாகும். முன்புதிவு செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 90 பயனாளர்களுக்கு மட்டும் விரைவாக இந்த மாடலை வழங்க உள்ளது. அனேகமாக இந்நிறுவனத்தின் முதல் வருட கொண்டாட்டம் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறுகின்றது. அந்த நாளில் விநியோகம் செய்யப்படலாம்.

சிவப்பு மற்றும் ஐவரி வண்ண திட்டத்தில் வந்துள்ள ஸ்பெஷல் எடிஷனில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாடலுக்கும் வரிசையான எண் 90 வரை டேங்கில் வழங்கப்பட்டிருக்கும். இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.

ஜாவா ஸ்பெஷல் எடிஷன் ரூ. 1.74 லட்சம் (Dual Channel ABS)

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago