Automobile Tamil

கபீரா மொபிலிட்டி KM5000 எலக்ட்ரிக் பைக் அறிமுகமானது

India’s Fastest Electric Bike: Kabira Mobility unveils the KM5000

இந்தியாவின் மிக வேகமான மற்றும் அதிக தொலைவு பயணிக்கின்ற KM5000 எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலின் அதிகபட்ச வேகம் 180Km/hr மற்றும் 344 Km/charge வெளிப்படுத்துவதனை கபீரா மொபிலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் ஒற்றை பக்க ஸ்விங் ஆர்ம் வடிவமைப்பு காப்புரிமை பெற்ற மிட் டிரைவ் பவர்டிரெய்ன் கொண்டதாக டெல்டா இவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

Kabira Mobility KM5000

கபீரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள KM5000 எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 11.6 kWh வாட்டர்-கூல்டு LFP பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 344Km வரம்பை வழங்குவதுடன் அதிகபட்ச வேகம் 180Km/hr ஆக உள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் அதிவேகமான எலக்ட்ரிக் மாடலாக கேஎம் 5000 விளங்கும்.

KM5000 பைக்கில் இரண்டு வகையான சார்ஜிங் ஆப்ஷனை கொண்டுள்ளது. அதிவேக சார்ஜர் மூலம், 2 மணி நேரத்திற்குள் 0 முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம் மற்றும் இரவு முழுவதும் சார்ஜ் செய்வதற்கான சாதாரண சார்ஜர் வசதியும் உள்ளது.

KM5000 இரட்டை சேனல் ABS கொடுக்கப்பட்டு முன்புறத்தில் இரட்டை டிஸ்க் மற்றும் ஒற்றை  டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் இன்வெர்டேட் ஃபோர்க்கு ஆனது ஷோவா நிறுவனம் மூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கில் 4ஜி ஆதரவுடன் கூடிய 7 இன்ச் ஸ்மார்ட் டச் ஸ்கிரீன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இசைக் கட்டுப்பாடு, மற்றும் வாகனம் தொர்பான அனைத்து முக்கிய தகவல்கள், பேட்டரி ஆரோக்கியம் மற்றும் பல்வேறு தகவல்களை கொண்டுள்ளது.

KM5000 பைக்கில் உள்ள மற்ற வசதிகள் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS), பக்கவாட்டு படி, சேலை பாதுகாப்பு, பார்க்கிங் அசிஸ்ட், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் ரன்னிங் விளக்குகள் கொண்டு எல்இடி டர்ன் இண்டிகேட்டரை பெற்றுள்ளது.

KM5000 மிட்நைட் கிரே, டீப் காக்கி மற்றும் அக்வாமரைன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
கபபீரா மொபிலிட்டி KM5000 விலை ₹ 3,15,000 (எக்ஸ்-ஷோரூம் கோவா). துவங்குகின்றது. அடுத்த சில மாதங்களில் டெலிவரியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற  KM3000 மற்றும் KM4000, KM2000 ஆகிய மூன்று மாடல்களை மேம்பட்ட வசதிகளை பெற்ற புரோ வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளதை உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க – எலக்ட்ரிக் டூ வீலர் விலை உயருகின்றதா ?

 

Exit mobile version