Automobile Tamilan

ரூ.13.94 லட்சத்தில் வெளியான கவாஸாகி நிஞ்சா 1100SX

Kawasaki Ninja 1100SX

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் டூரர் ரக மாடலான கவாஸாகி நிறுவனத்தின் நிஞ்சா 1100SX பைக்கில்  136hp பவரை வழங்கும் 1,099cc எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.13.94 லட்சத்தில் துவங்குகின்றது. ஜனவரி 2025 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

1000SX மாடலை விட மாறுபட்ட பவரை வெளிப்படுத்துகின்ற புதிய 1100SX பைக்கில் லிக்யூடு கூல்டு 1,099cc இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 136hp பவரை 9,000rpm-லும், 113Nm டார்க் ஆனது 7,600rpm-லும் வெளிப்படுத்துகின்ற நிலையில் இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

மெட்டாலிக் டையப்லோ கருப்பு என்ற நிறத்தினை பெறுகின்ற இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட் பெற்று, டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு பெறுகின்றது. மேலும் இதில் க்ரூஸ் கண்ட்ரோல், விரைவு ஷிஃப்டர், இழுவைக் கட்டுப்பாடு, என்ஜின் பிரேக் கட்டுப்பாடு, IMU ஆகியவை உள்ளது.

ப்ரீலோட், ரீபௌண்ட் மற்றும் கம்ப்ரஷன் அட்ஜஸ்ட்டிபிலிட்டி கொண்ட அப்சைடு டவுன் ஃபோர்க் கொண்ட நிஞ்ஜா 1100SX மாடலில் 120/70 முன் மற்றும் 190/50 பின்புறம் பிரிட்ஜ்ஸ்டோன் Battlax S23 டயர் கொண்டு 17 அங்குல வீல் கொண்டுள்ளது.

Exit mobile version