கவாஸாகி நின்ஜா e-1 மற்றும் Z e-1 எலக்ட்ரிக் பைக்கின் விபரம்

kawasaki electric bike ninja e-1

கவாஸாகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் பைக் மாடல்களான நின்ஜா e-1 மற்றும் Z e-1 என இரண்டையும் 125சிசி பைக்குகளுக்கு இணையாக தயாரித்து, முதன்முறையாக இங்கிலாந்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

தோற்ற அமைப்பில் இரண்டு எலக்ட்ரிக் பைக் மாடல்களும் சிறிய அளவிலான வித்தியாசத்தை கொண்டதாக அமைந்துள்ளது. ஆனால் ஸ்போர்ட்டிவ் வடிவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Kawasaki Ninja e-1 & Z e-1

நின்ஜா e-1 எல்க்ட்ரிக் பைக்கில் கிளிப்-ஆன் ஹேண்டில் பார்களுடன் பிளவுபட்ட எல்இடி ஹெட்லைட் பெறுகிறது, ஸ்பிளிட் இருக்கை மற்றும் ஒரு முழுமையான ஃபேரிங் செய்யப்பட்டு சூப்பர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளை போல் தோன்றுகிறது. Z e-1 எலக்ட்ரிக் பைக்கும் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்று ஸ்பிளிட் இருக்கை மற்றும் நேக்டூ ஸ்டைல் பெற்ற மோட்டார்சைக்கிளை போல் தோன்றுகிறது.

இரண்டு கவாஸாகி எலக்ட்ரிக் பைக்கிலும் பொதுவாக, நீக்கும் வகையிலான பேட்டரி பொருத்தப்பட்டு 5kW  மின்சார மோட்டார் மூலம் இயங்குகின்றது. ஆனால் ரேஞ்சு மற்றும் பேட்டரி விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நிஞ்ஜா இ-1 மற்றும் இசட் இ-1 ஆகியவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 99 கிமீ ஆக இருக்கும் என கவாஸாகி கூறுகிறது. ரோடு மற்றும் ஈக்கோ என இரண்டு ரைடிங் மோடினை பெற்றுள்ளது. கூடுதல் எலக்ட்ரிக் பைக்குகள் இ-பூஸ்ட் அம்சத்தைப் பெறுகின்றன. ஸ்மார்ட்போன் இணைப்புடன் முழு டிஜிட்டல் TFT போன்ற மற்ற அம்சங்களும் வழங்கப்படும்.

விலை அடுத்த மாதம் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும் பொழுது முழுமையாக தெரியவரும்.

Exit mobile version