கீவே K300 N, K300 R பைக்குகள் விலை குறைப்பு

கீவே நிறுவனம் 300cc பிரிவில் விற்பனை செய்கின்ற ஃபேரிங் ரக மாடல் K300 R மற்றும் நேக்டூ ஸ்போர்ட் மாடல் K300 N என இரண்டின் விலையும் ரூ.19,000 முதல் ரூ.54,000 வரை முறையே குறைத்துள்ளது.

எனவே, K300N இப்போது ரூ. 2.55 லட்சத்திற்கும், K300R விலை ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. முன்பாக இரண்டு மாடலும் ரூ.2.99 லட்சம்-3.19 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.

Keeway K300N, K300R

K300 மாடல்கள் இரண்டுமே ஒரே தளத்தை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் பாகனங்களை பகிர்ந்து கொள்கின்றன. K300 N சாதாரன ஹேண்டில்பார் மற்றும் நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் வடிவமைப்பினை பெற்றுள்ளது. R மாடல் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டு கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் பெற்றுள்ளது.

இரண்டு பைக்குகளும் மற்றபடி எந்த மாற்றமும் இல்லாமல், 292cc சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜினை பெற்று 27.8 PS பவர் மற்றும் 25Nm டார்க் வழங்குகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

கீவே K300R மாடல் நேரடியாக டிவிஎஸ் அப்பாச்சி RR 310 மற்றும் கேடிஎம் RC 390 பைக்கினை எதிர்கொள்ளுகின்றது. அடுத்து,  K300N பைக் மாடல் பிஎம்டபிள்யூ G310R மற்றும் ஹோண்டா CB300R ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

Share