விரைவில்.., கேடிஎம் 250 அட்வென்ச்சர் விற்பனைக்கு வெளியாகிறது

இந்தியாவில் அட்வென்ச்சர் ரக ஸ்டைல் மாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. முன்பாக 390 அட்வென்ச்சர் இந்திய சந்தையில் கிடைத்து வருகின்றது.

390 அட்வென்ச்சர் பைக்கின் பின்புலத்தை பெற்று வரவிருக்கும் 250 அட்வென்ச்சர் மாடலில் பல்வேறு விலை குறைப்பிற்கான நடவடிக்கையுடன் 250 டியூக் மாடலில் இடம்பெற்றுள்ள 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

250 அட்வென்ச்சரில் 855 மிமீ இருக்கை உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாகவும் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கினை பெற்றுள்ளது.

முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க்கு, பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு முன்புற டயரில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டு சுவிட்சபிள் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும். மேலும் பெரும்பாலான டீலர்களில் இந்த மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுகின்றது. 250 அட்வென்ச்சர் விலை ரூ.2.40 லட்சம் முதல் துவங்கலாம்.

Web Title : KTM 250 Adventure bookings open