ஏ.பி.எஸ் பாதுகாப்பு அம்சத்துடன் கேடிஎம் 250 ட்யூக் பைக் அறிமுகம்

கேடிஎம் நிறுவன பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு வரும் நிலையில், கேடிஎம் 250 ட்யூக் மாடலில் டியூவல் சேனல் அன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 1ந் தேதி முதல் 125சிசி க்கு குறைந்த திறன் பெற்ற மாடல்கள் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக் 125சிசி க்கு அதிகமான மாடல்களில் பொருத்துவது கட்டாயமாகும். இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக்கினை இணைக்க தொடங்கியுள்ளது.

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் ஏ.பி.எஸ் பிரேக்

இந்தியாவில் கேடிஎம் நிறுவனம், டியூக் வரிசையின் தொடக்க நிலை மற்றும் நடுத்தர சந்தையில் 125, 200, 250 மற்றும் 390 மாடல்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் 250 மற்றும் 390 டியூக்குகளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கை இணைத்துள்ளது.

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்படுள்ளது.

43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும்  WP நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. முன்புற டயரில் 300 மிமீ  டிஸ்க் பிரேக்கும், பின்புற டயரில் 230 மிமீ  டிஸ்க் பிரேக்கினை கொண்டதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஏபிஎஸ் அல்லாத மாடலைவிட ரூபாய் 13.400 வரை விலை அதிகரிக்கப்பட்டு டூயல் சேனல் ஏ.பி.எஸ் பாதுகாப்பு அம்சத்தை பெற்ற கேடிஎம் 250 ட்யூக் பைக் 1.94 லட்சம் ரூபாய் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version