Home Bike News

கேடிஎம் ஆர்சி200 ஏ.பி.எஸ் விற்பனைக்கு வந்தது

சூப்பர் ஸ்போர்ட்டிவ் ரக கேடிஎம் ஆர்சி200 பைக்கில் ஏ.பி.எஸ் பிரேக்கினை இணைத்து கேடிஎம் பைக்ஸ் நிறுவனம் ரூ.1.88 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. சாதாரன மாடலை விட ரூ.9000 வரை ஏபிஎஸ் மாடல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி200 ஏபிஎஸ்

வரும் ஏப்ரல் 1, 2019 முதல் இந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து விதமான இரண்டு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதியை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 125சிசி அல்லது மேற்பட்ட சிசி மாடல்களில் மற்றும் 125சிசி திறனுக்கு கீழுள்ள மாடல்களில் சிபிஎஸ் பிரேக்  சேர்க்கப்பட உள்ளது.

வேறு எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறாமல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ஆர்சி200 ஏபிஎஸ் பைக்கில்  25 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்ற ஆர்சி 200 பைக்கின் முன்புற டயரில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 280 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, அப்சைடு டவுன் ஃபோர்க்கு பெற்ற 43 மிமீ சஸ்பென்ஷன் மற்றும் ப்ரீலோடேட் மோனோஷாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது.

ஏபிஎஸ் பெற்ற மாடல்களுக்கு டீல்ர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏபிஎஸ் அல்லாத இருப்பில் உள்ள மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கேடிஎம் ஆர்சி200 பைக் விலை ரூ. 1.88 லட்சம் ( டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

Exit mobile version