Site icon Automobile Tamil

EICMA 2018-ல் சூப்பர்வேலோஸ் 800-ஐ காட்சிக்கு வைத்தது எம்.வி. அகஸ்டா

அதிக செயல்திறன் கொண்ட புருடல் 1000 மோட்டார் சைக்கிள்களை காட்சிக்கு வைத்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான எம்வி அகஸ்டா நிறுவனம், சமீபத்தில் நடைபெற்ற EICMA 2018 ஷோவில், புதிய நவீன ரோட்ரோ சூப்பர்ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள், சூப்பர்வேலோஸ் 800-ஐ காட்சிக்கு வைத்தது.

புதிய சூப்பர்வேலோஸ் 800 மோட்டார் சைக்கிள்கள் கார்ப்பன்-பைப்பர் பாடி வேலைப்படுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இது சிறப்பாக 70-ம் ஆண்டு கால ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் F3 800 மோட்டார் சைக்கிள்களில் இருந்த அதே இன்ஜின்களுடன் வெளியாக உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்களில், வட்டவடிவமான ஹெட்லைட்கள், முழு நீளம் கொண்ட விண்ட்ஸ்கிரீன் மற்றும் விண்ட் டிப்ளேக்ஷ்ன் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. சூப்பர்வேலோஸ் 800 மோட்டார் சைக்கிள்களின் பின்புறத்தில் முழு கலரில் TFT டாஸ் மற்றும் உயர்தரம் கொண்ட எலக்ட்ரானிக் பேக்கேஜ்களை கொண்டிருக்கும். இதில் ABS, 8-நிலை டிரக்ஷ்ன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் குயிக் ஷிப்ட்னர், ரியர் லிப்ட் மிஜிட்டேஷன் சிஸ்டம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் லிமிடெட் எடிசனாக இருக்காது என்றும் இந்த மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்பு வரும் 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள்கள் 2020-ம் ஆண்டில் பிற்பகுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.சூப்பர்வேலோஸ் 800 அறிமுகம் செய்யப்பட்டால், இந்த மோட்டார் சைக்கிள்கள், பிஎம்டபிள்யூ ஆர் நைன் T மற்றும் இதே வகை கிளாஸ் மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.

Exit mobile version