Automobile Tamilan

டிவிஎஸ் 2024 அப்பாச்சி RR310 பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

2024 tvs apache rr310 with bto

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 2024 அப்பாச்சி RR310 பைக் மாடல் விற்பனைக்கு ரூ.2.75 லட்சம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாம்பெர் கிரே நிறத்துடன் பாடி கிராபிக்ஸ் தவிர பல்வேறு நவீனத்துவமான வசதிகள் அப்பாச்சி RTR 310 பைக்கில் இருந்து பெற்று இருக்கிறது. கூடுதலாக விங்லெட்ஸ், RT-DSC, க்விக் ஷிஃப்டர் போன்ற சில முக்கிய அம்சங்கள் பெற்றிருப்பதுடன் எஞ்சின் பவர் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

2024 TVS Apache RR310

முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்போட்டிவ் மாடலில் தொடர்ந்து நேர்த்தியான பேனல்களைக் கொண்டிருப்பதுடன் ஏரோ விங்க்லேட்ஸ் (Aero Winglets) சார்ந்தது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் மூன்று கிலோகிராம் வரை டவுன் ஃபோர்ஸ் கிடைக்கும் இதனால் சிறப்பான வேகத்தை அப்பாச்சி ஆர்ஆர் 310 வெளிப்படுத்தும் என்பதுடன் கூடுதலாக மிகத் தெளிவாக காட்சிக்கு கிடைக்கும் வகையில் ட்ரான்ஸ்பரண்ட் கிளட்ச் கவர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அப்பாச்சி RR 310 மாடலில் தற்பொழுது குறிப்பிடதக்க மற்ற வசதிகளில் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் RT-DSE (Race Tuned Dynamic Stability Control) என்பது  கார்னரிங் ஏபிஎஸ் உடன் இணைந்து IMU ஆனது ரைடர் எய்ட்களுடன் டிராக்‌ஷன் கட்டுப்பாடு மற்றும் வீலி கட்டுப்பாடு. கடைசியாக, விரைவான பை-டைரக்சல் விரைவு ஷிஃப்டருடன் வந்துள்ளது. இது டைனமிக் ப்ரோ கிட்டில் மட்டுமே கிடைக்கிறது.

RR 310 மாடலில் தொடர்ந்து 312.2 cc சிங்கிள் சிலிண்டர் ரிவர்ஸ் இன்க்லைன்ட் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இப்போது 37.48 bhp மற்றும் 29 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடல் 34 bhp மற்றும் 27.3 Nm வழங்கியது. 6 வேக கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட் மற்றும் டிராக் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 164 கிமீ வேகத்தை எட்டக்கூடும். மற்றும் 0-60 கிமீ வேகத்தை 2.82 வினாடிகளில் மற்றும் 0-100 கிமீ வேகத்தை 6.74 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் BTO கஸ்டமைசேஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு கூடுதல் ரைடிங் சார்ந்த கஸ்ட்மைஸ்டு செய்துக் கொள்ளலாம். இதில் Dynamic, Dynamic Pro மற்றும் Race Replica நிறம் என மூன்று உள்ளது.

2024 TVS Apache RR310 Price list

2024 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விலை ரூ.2.75 லட்சம் முதல் ரூ.2.97 லட்சம் வரை அமைந்துள்ளது. கூடுதலாக BTO ஆப்ஷனும் உள்ளது.

வேரியண்ட் விலை (Ex-showroom, India)
Red (without quickshifter) Rs 2,75,000
Red (with quickshifter) Rs 2,92,000
Bomber Grey Rs 2,97,000
BTO (Built To Order)

• Dynamic Kit
• Dynamic Pro Kit
• Race Replica Colour

 

Rs 18,000
Rs 16,000
Rs 7,000

2024 tvs apache rr310 with bto

 

Exit mobile version