Automobile Tamilan

ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய டீசர் வெளியானது

ather 450s escooter teaser

90 கிமீ வேகத்தை மீண்டும் உறுதி செய்யும் வகையில் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கிளஸ்ட்டர் தொடர்பான ஏதெர் எனர்ஜி டீசர் வெளியாகியுள்ளது. முன்பே இந்நிறுவனம், ரேன்ஜ் 115 கிமீ எனவும் விலை ரூ.1,29,999 ஆக உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்திய அரசு வழங்கி வந்த FAME 2 மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 450 எக்ஸ் விலை ₹ 1,46,664 மற்றும் புரோ பிளஸ் பேக் இணைத்தால் ₹ 1,67,178 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.

ஏதெர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

விற்பனையில் கிடைக்கின்ற 450x ஸ்கூட்டரின் டிசைன் அம்சங்களை அடிப்படையாக கொண்டு சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும். மற்றபடி, எந்த மாற்றங்களும் இருக்காது.

முன்பாகவே, 450 எஸ் மாடல் 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி திறன் 3kWh ஆக பெற்ற ஏதெர் 450S டாப் ஸ்பீடு 90Km/hr ஆக இருக்கும். ஏதெர் எனர்ஜி குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாதம் முதல் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசத்தி பெற்ற ஒலா எலக்ட்ரிக் எஸ்1, எஸ்1 ஏர், டிவிஎஸ் ஐக்யூப் எஸ், ஆகிய மாடலுகளுடன் பல்வேறு குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும். முழுமையான விபரங்கள் சில நாட்களில் வெளியாகலாம்.

மேலும் படிக்க – ஓலா S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்புகள்

Exit mobile version