அக்டோபர் 28 .., பஜாஜ் பல்சர் 250 விற்பனைக்கு வருகின்றது

5b7fd bajaj pulsar ns 125 fiery orange price

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புத்தம் புதிய பல்சர் 250 பைக்கினை அக்டோபர் 28 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் உயர் திறன் பல்சரில் நவீனத்துவமான அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

நேக்டூ ஸ்டைல் NS250 மற்றும் செமி ஃபேரிங் 250F என இரு விதமாக எதிர்பார்க்கப்படுகின்ற பல்சர் 250 மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட அல்லது டாமினார் 250 பைக்கில் இடம்பெற்றுள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 25 ஹெச்பி பவர் மற்றும் 21 என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது.

வரவிருக்கும் பல்சர் 250 மாடல் புதிய தலைமுறை பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் என்பதனால் குறைந்த சிசிகளில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ் மற்றும் மற்ற பல்சர் பைக்குகளும் இதன் அடிப்படையில் மேம்படுத்தப்படலாம்.

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் 220F மாடலின் விலை ரூ.1.32 லட்சத்தில் கிடைப்பதனால், புதிய பல்சர் 250 விலை ரூ.1.50 லட்சத்திற்குள் துவங்கலாம்.

Exit mobile version