Automobile Tamilan

மிகப்பெரிய பஜாஜ் பல்சர் NS400 பைக்கின் விபரம் வெளியானது

Bajaj Pulsar NS400

பஜாஜ் ஆட்டோ பல்சர் வரிசையில் மிகப்பெரிய பல்சர் மாடல் ஆனது விற்பனைக்கு வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. தற்பொழுது வரை பல்சர் வரிசையில் 125சிசி-250சிசி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் புதிதாக வரவுள்ள பல்சர் என்எஸ் 400 மாடல் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பவர்ஃபுல்லான மாடலாக விளங்க உள்ளது. இது பல்சர் வரிசைக்கு மிகப்பெரிய ஒரு பலமாக கருதப்படுகின்றது.

பல்சர் NS400 தொடர்பில் சில புகைப்படங்கள் ஆனது தற்பொழுது பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் மிக ஆக்ரோஷமான தோற்ற அமைப்பினை முகப்பில் வெளிப்படுத்தும் வகையில் வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் கொடுக்கப்பட்டு கூடுதலாக எல்இடி ரன்னிங் விளக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. பின்புறதி மோனோசாக் சஸ்பென்ஷன் ஆனது கொடுக்கப்பட்டு ஸ்பிளிட் சீட் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது.

பல்சர் என்எஸ் 400 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் கனெக்டிவிட்டி சார்ந்த வசதிகளை வழங்கும் வகையிலான பஜாஜ் ரைட் கனெக்ட் அம்சங்கள் இடம் பெற்று இருக்கும் கூடுதலாக இந்த பைக்கில் டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் மோடு, ரைடிங் மோடுகள் இடம் பெறுவது குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.

ரூபாய் 2,00,000 முதல் 2,20,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பஜாஜ் பல்சர் என்எஸ் 400 பைக் ஆனது மிகப்பெரிய ஒரு மாற்றத்தை நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம் முழுமையான விபரங்கள் மே மாதம் மூன்றாம் தேதி விற்பனைக்கு வரும்போது விலை அறிவிக்கப்படலாம்.

Bajaj Pulsar NS400 Highlights

Exit mobile version