Automobile Tamilan

160cc சந்தையில் புதிய கேடிஎம் டியூக் டீசர் வெளியானது

ktm 160 duke teased

நடப்பு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் கேடிஎம் நிறுவனத்தின் 160 டியூக் மாடல் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்று குறிப்பாக எம்டி-15 உட்பட மற்ற அப்பாச்சி 160, எக்ஸ்ட்ரீம் 160, ஹோண்டா எஸ்பி160 மற்றும் பஜாஜின் பல்சர் 160 பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பாக வெளியான தகவலின் படி 160cc எஞ்சின் பெற்ற டியூக் 160 மற்றும் ஃபேலரிங் ஸ்டைலை பெற்ற ஆர்சி 160 ஆகியவற்றை வெளியிட உள்ளது. ஆனால் ஆர்சி 160 சற்று தாமதமாக வரக்கூடும்.

இந்த புதிய மாடலில் ஒற்றை-சிலிண்டர், 160 சிசி லிக்யூடூ கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 18-20 hp மற்றும் 15 Nm டார்க் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் உடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம். எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு வரவிருக்கும் கேடிஎம் 160 டியூக் விலை ரூ.1.90 லட்சத்துக்குள் அமையலாம்.

 

Exit mobile version