Automobile Tamilan

விரைவில் சர்ஜ் எஸ்32 விற்பனைக்கு வெளியாகிறதா..!

surge s32

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சர்ஜ் ஆட்டோமொபைல்ஸ் தயாரித்துள்ள S32 மாடல் ஆனது L2–5 பிரிவில் அனுமதிக்கு வரைவு அறிவிக்கை இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வரைவுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றால் உடனடியாக எஸ்32 ஆனது விற்பனைக்கு வெளியாகலாம்.

இந்தியாவில் இந்த பிரிவில் வரவுள்ள முதல் மாடலாகவும், தற்பொழுது தயாரிப்பு நிலையை எட்டியுள்ள சர்ஜ் S32 மாடல் சமீபத்தில் ஹீரோ வோர்ல்டு  2024 அரங்கில் காட்சிக்கு வெளியானது.

L2-5 Vehicle Category

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 க்கு கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிவிப்பின்படி, வகை L2-5 ‘என்பது மூன்று சக்கர மோட்டார் வாகனமாகும், 2-சக்கர வாகனம் மற்றும் 3 சக்கர கூட்டு தொகுதி, L2 வகையைச் சேர்ந்த இரு சக்கர வாகனம் இயக்குதல் இல்லா நிலையில் இணைக்கப்படும் தேவைக்கேற்ப பிரிக்கலாம் அல்லது இணைக்கலாம்.

“வகை L2 – 5 M” என்பது பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உள்ள மாடலாகும். அடுத்த வகை L2 – 5 N” என்பது L2-5 வகையில் சரக்கு  எடுத்துச் செல்லும் நோக்கத்தில் உள்ளது.

L2-5 வகை வாகனங்களில், L2 பிரிவின் பிரிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அல்லது L5 பிரிவின் ஒருங்கிணைந்த மூன்று சக்கர வாகனங்கள் என இரண்டு வாகனங்களுக்கும் ஒரே பதிவு எண் மட்டும் ஒதுக்கப்படும்.

Surge S32

எலக்ட்ரிக் ஸ்கூட்டராக செயல்படும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகம், 6 kW பவர் மற்றும் இதனுடைய பேட்டரி திறன் 3.87 kWh ஆகும். அதுவே மூன்று சக்கர ஆட்டோவாக மாற்றினால் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கிமீ, பவர் 10Kw மற்றும் பேட்டரி திறன் 11.616 kWh ஆக உயருகின்றது.

எஸ்32 மாடலை வெறும் 3 நிமிடங்களில் ஸ்கூட்டரிலிருந்து மூன்று சக்கர ஆட்டோவாக மாற்றிக் கொள்ளலாம்.

Exit mobile version