Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பைக்கின் சிறப்புப் பார்வை

re himalayan 450

அட்வென்ச்சர் டூரிங் ரக மோட்டார்சைக்கிள் மாடலாக வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் புதிய செர்பா 450 என்ஜின் பெற்று மிக சிறப்பான வசதிகள், ஆஃப் ரோடு சாகங்களுக்கு ஏற்ற வகையில் மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டு, பல்வேறு நவீன வசதிகளுடன் வந்துள்ளது.

முந்தைய எல்எஸ் 411 ஹிமாலயனை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டு முற்றிலும் திறன் மிகுந்த மாடலாகவும் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சத்தை வழங்கி ஹிமாலய மலையின் நிறத்தை உந்துதலாக கொண்ட 5 நிறங்களை பெற்றுள்ளது.

New Royal Enfield Himalayan 450

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் முதன்முறையாக பொருத்தப்பட்டுள்ள செர்பா 450 என அழைக்கப்படுகின்ற 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

42mm திராட்டிள் பாடி எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மேலும், ஈக்கோ ஏபிஎஸ் ஆன், ஈக்கோ ஏபிஎஸ் ஆஃப் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆஃப் போன்ற ரைடிங் மோடு ஆப்ஷனையும் பெறுகின்றது.

பொதுவாக லாங் ஸ்ட்ரோக் என்ஜினுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் செர்பா 450 என்ஜின் மூலம் நவீனத்துவமான அம்சத்துக்கு மாறியுள்ளதால், இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையிலும் அமோக வரவேற்பினை பெற வாய்ப்புகள் உள்ளது.

புதிய ஹிமாலயன் பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,245mm அகலம் 852mm மற்றும் உயரம் 1,316mm . அடுத்து வீல்பேஸ் 1510mm மற்றும் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ கிராம் மட்டுமே உள்ளதாக பைக்கினை கையாளுவதற்கு ஏதுவாக உள்ளது.

புதிய அம்சங்கள்

புதிய ட்வின் ஸ்பார் ஸ்டீல் அடிச்சட்டத்தை பெற்றுள்ள பைக்கில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. மேலும் ரியர் ஏபிஎஸ் ஆனது சுவிட்ச் ஆஃப் செய்யும் முறையில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பு சிறப்பாக செயல்படுவதுடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் பயன்பாடு மிகவும் வலு சேர்க்கின்றது.

முன்புற டயரில் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் அகலமான ரேடியல் 140/80 R17 அங்குல வீல் உடன் உள்ள புதிதாக தயாரிக்கப்பட்ட சியட் நிறுவன டயர் மூலம் சிறப்பாக சாலையில் தேவையான கிரீப் வழங்க உதவுகின்றது.

குறைந்த உயரம் உள்ளவர்களும் ஹிமாலயன் பைக்கினை அனுகும் வகையில் இருக்கை உயரம் 825mm ஆக அமைக்கப்பட்டுள்ளது,  விரும்பினால் அதை 845mm ஆக உயர்த்தலாம். இருக்கை உயரத்தை குறைக்க விரும்பினால் 805mm ஆக குறைக்க முடிகின்றது.

கனெக்ட்டிவ் வசதி

ஸ்மார்ட்போன் இணைப்பினை பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய 4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டர் மிக தெளிவான முறையில் பார்வைக்கு அனைத்து அம்சங்களும் தெரியும் வகையில் எளிமையாகவும் அதிக வசதிகள் கொண்டதாகவும் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரிப்பர் நேவிகேஷன் மாட்யூலை ஹிமாலயனுக்காக மேம்படுத்தியுள்ளது, ஏனெனில் அது இப்போது முழு அளவிலான கூகுள் மேப்ஸ் உடன் நேவிகேஷன், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளை அணுகும் வகையில் உள்ளது.

ஹிமாலயன் 450 வேரியண்ட்

ஹிமாலயன் மூன்று விதமான வேரியண்டில் ஐந்து வண்ண விருப்பங்களை கொண்டுள்ளது. பேஸ் (Base) வேரியண்ட் காசா பிரவுன் நிறத்தை மட்டுமே பெறுகிறது, மிட்-ஸ்பெக் பாஸ் (Pass) வேரியண்ட் ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் அல்லது ஸ்லேட் பாப்பி ப்ளூ என இரண்டிலும் மற்றும் டாப்-ஸ்பெக் சம்மிட் (Summit) வேரியண்ட் காமெட் ஒயிட் அல்லது ஹான்லே பிளாக் ஆகியவற்றில் இருக்கும்.

இலகுவாக மணிக்கு 150 கிமீ வேகத்தை எட்டும் செயல் திறனை பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நெடுஞ்சாலைகளில் சிறப்பான க்ரூஸிங் அனுபவத்தை வழங்குவதுடன் ஆஃப் ரோடு சாலைகளில் சிறந்த முறையில் கையாளுவதற்கான தரம் மற்றும் வசதிகளை பெற்றுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலை ரூ.2.50 முதல் ரூ.2.70 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் 24 மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்ச்சியில் விலை அறிவிக்கப்பட உள்ளது.

RE Himalayan 450 Image Gallery

Exit mobile version