Automobile Tamilan

டார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் வெளியானது

tork escooter spied

பேட்டரி மின்சார ஸ்கூட்டர் சந்தை விரிவாகி வரும் நிலையில் டார்க் மோட்டார் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது. டார்க் கிராடோஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்து வருகின்றது.

கிராடோஸ் உடன் கூடுதலாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டும் வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்ப பயன்பாடிற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கலாம்.

Tork Electric Scooter

குறைந்த விலை கிராடோஸ் எலக்ட்ரிக் பைக்கினை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில், கூடுதலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை தயாரித்து வருவதனை உறுதிப்படுத்தும் வகையில் படங்கள் வெளியாகியுள்ளது.

ஒற்றை இருக்கையுடன் பின்புறத்தில் டூயல் ஸ்பீரிங் ஷாக் அப்சார்பர் பெற்றதாகவும், உள்ள இந்த மாடலின் எந்த நுட்ப விபரங்களும் எதவும் வெளியாகவில்லை. அனேகமாக இந்த மாடல் 150 கிமீ ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு 80 கிமீ வரை எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

விற்பனைக்கு அனேகமாக 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா S1, ஏதெர் 450 சீரிஸ், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ரூ.1.50 லட்சத்துக்குள் வரக்கூடும்.

சந்தையில் விற்பனையில் உள்ள டார்க் கிராடோஸ் பைக் 4KWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயக்கப்பட்டு IP67 சான்றிதழ் பெற்றதாக அமைந்துள்ளது. மற்றபடி ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் உட்பட ரிவர்ஸ் மோட் ஆகிய டிரைவ் மோடுகளை பெற்றுள்ளது.

கிராடோஸ் மாடலில் 7.5kW, 28Nm மோட்டார் மூலம் இயக்கப்பட்டு 4 நொடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் அமைந்துள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும்.

கிராடோஸ் R மாடலில்  9kW, 38Nm மோட்டார் மூலம் இயக்கப்பட்டு 3.5 நொடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் அமைந்துள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும்.

Image Source

Exit mobile version