Automobile Tamilan

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு வெளியானது

tvs apache rtr 310 bto blue

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி பைக் வரிசையில் புதிதாக RTR 310 நேக்டூ ஸ்டைல் மாடலை விற்பனைக்கு ரூ.2.42 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்பாக ஃபேரிங் ஸ்டைல் பெற்ற அப்பாச்சி RR310 மாடல் சந்தையில் உள்ளது.

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்ட 500cc-க்கு குறைவான என்ஜின் பிரிவில் வந்த 310சிசி என்ஜின் பெற்று பிஎம்டபிள்யூ G 310R , G310GS, G 310RR என மூன்று மாடல்களும், டிவிஎஸ் தற்பொழுது இரண்டு மாடல்களையும் கொண்டுள்ளது.

TVS Apache RTR 310

கடந்த 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக 150சிசி என்ஜின் பெற்ற முதல் அப்பாச்சி பைக் அறிமுகம் செய்யப்பட்டு, 18 ஆண்டுகளுக்கு மேலாக அப்பாச்சி சீரிஸ் அமோக ஆதரவினை பெற்றதாக விளங்கி வருகின்றது. 30க்கு மேற்பட்ட நாடுகளில் 50 லட்சம் விற்பனை எண்ணிக்கையை 2022-2023-ல் கடந்துள்ளது.

இரு பிரிவுகளை பெற்ற டைனமிக் எல்இடி ஹெட்லைட் கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் மாடலில் மற்ற 310சிசி என்ஜின் பெற்றதை போலவே 312.12cc என்ஜின்  35.6 bhp பவரை 9,700 rpm மற்றும் 28.7 Nm டார்க் ஆனது 6,650 rpm-ல் வழங்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் பொருத்தப்பட்டிருக்கின்றது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 டாப் ஸ்பீடு 150Km/hr ஆகும்.

கூர்மையான வடிவமைப்பாக உள்ளது, பெட்ரோல் டேங்க் அமைப்பில் நீட்டிப்புகள் மற்றும் குறைந்தபட்ச டெயில் நீளம் பெற்றுள்ளது. கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கும். அப்பாச்சி

ஆர்டிஆர்310 பைக்கிலும் 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டதாகவும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் வந்துள்ளது. கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல், 5 விதமான ரைடிங் மோடுகள், கிளைமேட் கண்ட்ரோல் இருக்கை, கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்‌ஷன் கட்டுப்பாடு GoPro கேமரா இணைப்பு ஆதரவு, டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்ட், டயர் பிரெஷர் மானிட்டர், ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் விருப்பதிற்கு ஏற்ப BTO முறையில் கஸ்டமைஸ் செய்து வாங்கும் வசதியும் டிவிஎஸ் மோட்டார் வழங்க உள்ளது.

TVS Apache RTR 310 – ₹ 2,42,990 (without shifter)

TVS Apache RTR 310 – ₹ 2,57,990 (Black)

TVS Apache RTR 310 – ₹ 2,63,990 (Yellow)

BTO முறையில் பெற Dynamic Kit ரூ. 18,000 மற்றும் Dynamic Pro Kit ரூ. 22,000 கூடுதலாக சேபாங் நீல நிறம் ரூ.10,000 கூடுதலாக அமைந்துள்ளது.
கேடிஎம் 390 டியூக், ட்ரையம்ப் ஸ்பீடு 400, பிஎம்டபிள்யூ G 310 R, கீவே K300N மற்றும் ஹோண்டா CB300R ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

 

Exit mobile version