Automobile Tamilan

புதிய அப்பாச்சி RTR வருகையா டீசரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

TVS Apache RTR teased

‘Blazing Soon’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கினை  விற்பனைக்கு உறுதி செய்யும் வகையில் டிவிஎஸ் மோட்டார் டீசர் வெளியாகியுள்ளது. ஆனால் அப்பாச்சி பிரிவில் உள்ள RTR 160, RTR 180, RTR 200, RTR 310 போன்றவை விற்பனையில் உள்ள நிலையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற RR310 R ஆகியவை கிடைக்கின்றது.

வரவிருக்கும் புதிய மாடல் குறித்து எந்த உறுதியான விபரமும் வெளியாகவில்லை. ஆனால் அப்பாச்சி சீரிஸ் பைக்குகளில் மட்டும் வரவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அனேகமாக சிறப்பு எடிசன் மாடலாக இருக்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக 2.2kwh, 3.4 kwh மற்றும் 5.1kwh என மூன்று பேட்டரி ஆப்ஷனில் 5 விதமாக விற்பனைக்கு ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Exit mobile version