டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் மாடலாக அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 மோட்டார்சைக்கிளின் அறிமுக சலுகை விலை ரூ.1.99 லட்சம் முதல் துவங்கி ரூ.2.34 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவு நெடுஞ்சாலை டூரிங் மற்றும் அட்வென்ச்சர் சாகசங்களுக்கான ஆஃப் ரோடு பயணங்கள் என இரு விதமான பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைந்துள்ள நிலையில் இந்த பைக்கில் ரைட் பை வயருடன் கூடிய RTX-D4 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்தும் நிலையில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
ஸ்டீல் டிரெல்லிஸ் சேஸிஸ் கொண்டு மிக சிறப்பான வகையில் பைக்கினை கையாளும் வகையிலான அம்சத்தை பெற்ற அப்பாச்சி ஆர்டிஎக்ஸில் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்று முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்று 240 மிமீ டிஸ்க்குடன் டீயூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளதால் ஆஃப் ரோடு பயணங்களில் மிகப்பெரிய அளவில் சிரமத்தை தவிர்க்கலாம்.
இந்த பைக்கில் Urban, Rain, Tour மற்றும் Rally என நான்கு விதமான ரைடிங் மோடினை பெற்று ரைடிங் மோடுக்கு ஏற்ப என்ஜின் செயல்திறன், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் செயல்படும்.
மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், க்விக் ஷிஃப்டர், அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
5 அங்குல TFT கிளஸ்ட்டரின் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட ரைடருக்கு ஏற்ற பல்வேறு SmartXonnect கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்கியிருக்கின்ற டிவிஎஸ் நிறுவனம், கூடுதலாக அக்செரீஸ் சார்ந்த பல்வேறு வசதிகளை வழங்க GIvi, அல்பைன்ஸ்டாருடன் இணைந்து பல தயாரிப்புகளை அறிவித்துள்ளது.
வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளை பொறுத்தவரை டாப் வகையில் டிஎப்டி கனெக்ட்டிவிட்டி, பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர், டாப் கேஸ் மவுண்டிங் பெற்று உள்ள நிலையில் BTO வகையில் TPMS, அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் உள்ளது.
பொதுவாக வேரியண்ட் வாரியாக நிறங்கள் மாறுபடும் நிலையில் லைட்டினிங் பிளாக், வெள்ளை, மெட்டாலிக் ப்ளூ, டார்ன் பிரான்ஸ், மற்றும் வைப்பர் பச்சை போன்ற நிறங்கள் உள்ளது.
- BASE Apache RTX – ₹ 1,99,000
- Top Apache RTX – ₹ 2,14,000
- BTO Apache RTX – ₹ 2,34,000