ஜூலையில் ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக் விநியோகம் துவக்கம்

Oben Rorr electric bike

ஓபன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரின் ரோர் எலக்ட்ரிக் பைக் ரேன்ஜ் 187 கிமீ கொண்டுள்ள மாடலின் விநியோகம் ஜூலை மாதம் துவங்க உள்ளது. தற்பொழுது வரை 21,000க்கு அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் பெங்களூரில் உள்ள உற்பத்தி ஆலையில் தங்கள் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 100,000 ஆக உயர்த்துவதற்காக ரூ.40 கோடி நிதியை முதல் சுற்றில் திரட்டி விரிவுப்படுத்தியுள்ளது.

Oben Rorr electric motorcycle

ஓபன் ரோர் எலகட்ரிக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 95 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய AIS 156 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ரோர் எலக்ட்ரிக் பைக் 3 வினாடிகளில் 0 முதல் 40 kmph வேகத்தை எட்டும் மற்றும் அதிகபட்ச வேகம் 100 kmph வழங்கும். 8 kW IPMSM மோட்டார் கொண்டுள்ள எலக்ட்ரிக் பைக்கில் 4.4 kWh பேட்டரி திறன் கொண்டு சிங்கிள் சார்ஜில் 187 கிமீ (IDC) வரம்பை வழங்கும். 120 நிமிடங்கள் (2 மணிநேரம்) விரைவாக வீட்டிலுள்ள சார்ஜ் செய்ய உதவுகிறது.

ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக்கின் விலை ₹ 1,49,999 ஆகும்.

இந்நிறுவனம்  R&D மையம் புதிய மாடலை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், 2024-ல் இரண்டாவது தயாரிப்புக்கான முன்மாதிரியின் உருவாக்கம் மற்றும் சோதனை மேற்கொள்ள உள்ளது.