Home Bike News

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு 130 கோடி பணத்தை திரும்ப தருகின்றது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற FAME அரசு மானியம் வழங்கி வருகின்றது. இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் அரசுக்கு தவறான தகவலை வழங்கி மானியம் பெற்று சுமார் 10,000 கோடி வரை மோசடியில் ஈடுபடுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்பொழுது இந்த பிரச்சனையில் சிக்கியுள்ள ஓலா எலக்ட்ரிக், ஏதெர் எனெர்ஜி, டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் வீடா ஆகிய நிறுவனங்ளும் இணைந்துள்ளது.

நான்கு நிறுவனங்களும் மானியங்களைப் பெறுவதற்காக அரசின் FAME திட்டத்தின் கீழ் 1.5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையை நிர்ணையம் செய்துள்ளன. தற்பொழுது ஒலா, ஏதெர் போன்ற நிறுவனங்களை விலையை குறைத்துள்ளன. குறிப்பாக, மென்பொருள் அம்சங்கள் மற்றும் ஆஃப் போர்டு சார்ஜருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கியுள்ளன.

ஓலா எலக்ட்ரிக் 130 கோடி ரீஃபன்ட்

இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) மேற்கொண்டு வரும் ஒழுங்குமுறை நடவடிக்கையை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஓலா S1Pro மாடல் ஸ்கூட்டரை FY 2019-20 முதல் மார்ச் 30, 2023 வரை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆஃப்-போர்டு சார்ஜருக்கான கட்டணத்திற்கான பணத்தை திரும்ப தர உள்ளது,” என்று ஒரு அரசாங்க அதிகாரி CNBC-TV18 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மட்டுமே 130 கோடி ரூபாய் தொகையை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்குவதாக கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த புகாரில் சிக்கியுள்ள மற்ற நிறுவனங்களுடம் இருந்து தொகையை திரும்ப பெற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் ரேடாரின் கீழ் வந்த மற்ற நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை.

updated-

மே 2022 முதல் மார்ச் 2023 வரை iQube S மாடலை வாங்கிய 87,000 வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் நிறுவனம் ₹15.61 கோடியை திரும்ப தரவுள்ளது.. மேலும் ஹீரோ ‘VIDA V1 Plus’ மற்றும் ‘vida V1 Pro’ மாடல்களை வாங்கிய 1,100 வாடிக்கையாளர்களுக்கு ₹ 2.23 கோடியைத் திருப்பித் தரும்.

ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வாங்கிய 95,000 வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ரூ.140 கோடி என்ற அதிகபட்ச தொகையை ஏதெர் எனெர்ஜி வழங்குகின்றது. கூடுதலாக மென்பொருள் மேம்பாடு பெற கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் பேட்டரி திறனை குறைத்த காரணத்துக்கு ₹25 கோடியை கனரகத் தொழில் துறை அமைச்சகம் அபராதமாக விதிக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

உள்நாட்டில் உதிரிபாகங்கள்

FAME  மானியம் பெற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக போலியான தகவலை வழங்கிய காரணத்துக்காக ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஓகினாவா ஆட்டோடெக் இரு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக, இந்த OEM களில் இருந்து 249 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஒன்றிய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ.116 கோடி அபராதமும் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்களான ஒகாயா EV, ஜிதேந்திரா நியூ EV டெக், எலக்ட்ரிக் மொபிலிட்டி, ரிவோல்ட் இன்டெலிகார்ப், கைனெடிக் கிரீன் எனர்ஜி, அவான் சைக்கிள், லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், துக்ரல் எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் விக்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் இன்டர்நேஷனல் போன்றவை ஆய்வில் உள்ளது.

Exit mobile version