Automobile Tamilan

நாளை ஓலா எலக்ட்ரிக் Gen-3 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகின்றது.!

ola gen3 escooter launch soon

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை (Gen-3) S1 வரிசை ஸ்கூட்டர்களை ஜனவரி 31, 2025-ல் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட மேம்பட்ட நுட்பங்களுடன் கூடுதல் ரேஞ்ச் மற்றும் வசதிகள், தரம் மேம்படுத்தப்படிருக்கலாம்.

ஏற்கனவே மூன்றாம் தலைமுறை பற்றி ஓலா எலக்ட்ரிக் குறிப்பிடுகையில், சொந்த தயாரிப்பான 4680 பாரத் செல்களைக் கொண்டு பேட்டரிகள் தயாரிக்கப்படுவதனால் விலையும் சற்று மலிவாக இருக்கலாம் என தெரிகின்றது.

சந்தையில் கிடைத்து வருகின்ற ஓலா இ-ஸ்கூட்டர்களில் உள்ள சிக்கலான வயரிங் சிஸ்டத்தை மிக எளிமையாக மாற்றி அமைத்து இருப்பதுடன் கூடுதலாக பல்வேறு ப்ராசஸர்கள் பெற்றுள்ள GEN 1 மற்றும் GEN 2 மாடல்களை விட குறைவான பிராசஸர்களை கொண்டதாக வரவுள்ள மூன்றாம் தலைமுறை மாடலில் பேட்டரி, மோட்டார் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்ட வடிவமைப்பினை பெற்றிருக்கலாம்.

இதுதவிர, இந்நிறுவனம் ஓலா ரோட்ஸ்டெர் எலக்ட்ரிக் பைக் உட்பட ஸ்போர்ட்டிவ் Arrowhead இ-பைக்குகளின் டெலிவரி குறித்தான முக்கிய தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version