ப்யூர் இவி ஈக்கோ டிரிஃப்ட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது

ப்யூர் இவி (Pure EV) எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய ஈக்கோ டிரிஃப்ட் (Pure EV ecoDryft) மின்சார பைக் விலை ரூ. 1,14,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. கம்யூட்டர் வகை இரு சக்கர வாகனமாக விளங்குகின்ற ஈக்கோட்ரிஃப்ட் அதிகபட்சமாக 130 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ப்யூர் இவி நிறுவனம் முன்பாக இப்ளூட்டோ, என்ட்ரன்ஸ் நியோ என இரு ஸ்கூட்டர்களும் இடிரிஸ்ட் என்ற பைக்கினையும் விற்பனை செய்து வருகின்றது.

Pure EV ecoDryft

EcoDryft ev பைக் கருப்பு, சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு நிறங்களை கொண்டு 3.0 kWh காப்புரிமை பெறப்பட்டு AIS சான்றளிக்கப்பட்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த பைக் அதிகபட்சமாக 4 BHP மற்றும் 40 Nm டார்க் உற்பத்தி செய்கிறது.  மேலும் 0-10 வினாடிகளில் மணிக்கு 0-60 கிமீ வேகத்தை எட்டும்.

மின்சார மோட்டார்சைக்கிள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 135 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். ப்யூர் இவி ஈக்கோ டிரிஃப்ட் அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3kWh பேட்டரி பேக்கினை சார்ஜ் ஏற்ற 600 W சார்ஜருடன் ஆறு மணி நேரம் ஆகும். அனைத்தும் எல்இடி விளக்குகள், டிரைவ், கிராஸ் ஓவர், த்ரில் என மூன்று ரைடிங் முறைகள் கொண்ட டிஜிட்டல் கன்சோல், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் ரிமோட் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் ஆகியற்றுடன் 101 கிலோ மட்டும் எடை கொண்டுள்ளது.

 

Exit mobile version