ப்யூர் EV நிறுவனம் சிங்கிள் சார்ஜில் 150 Km பயணிக்கின்ற eபுளூட்டோ 7G புரோ (ePluto 7G PRO) மாடலை ₹94,999 விலையில் வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே இந்நிறுவனம், ePluto மற்றும் ePluto 7G என இரு மாடல்களை குறைந்த ரேஞ்சு வெளிப்படுத்துவதாக விற்பனை செய்து வருகின்ற நிலையில் புதிய ePluto 7G PRO அதிக ரேஞ்சு வெளிப்படுத்துகின்றது.
ePluto 7G PRO முன்பே விற்பனையில் கிடைக்கின்ற இபுளூட்டோ 7G போன்ற ரெட்ரோ டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இரு மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாடி பேனல்கள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் ஆகியவற்றைப் பெறுகிறது. புதிய மின்சார ஸ்கூட்டர் மேட் பிளாக், கிரே மற்றும் ஒயிட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ecoDryft எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரியை பெறுகின்றது. இந்த மாடலில் ஸ்மார்ட் BMS அமைப்புடன் கூடிய 3 KWh போர்டெபிள் பேட்டரியை பெற்று மூன்று வெவ்வேறு முறைகளில் 100 முதல் 150 கிமீ வரை வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பவர்டிரெய்னுக்கு வரும்போது, அதிகபட்சமாக 2.4 kW பவர் வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது.
ePluto 7G PRO ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 60Km/h ஆக உள்ளது. டயர்களில் 90/100—10 மற்றும் பின்புறத்தில் 3.00—10 டயரை பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷனை பெறுகின்றது.
புதிய ப்யூர் ePluto 7G PRO ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் மே மாத இறுதி வாரத்தில் டெலிவரி துவங்கப்படலாம்.
Pure ePluto 7G PRO – ₹ 94,999
Pure ePluto 7G – ₹ 86,999
Pure ePluto – ₹ 74,999
(எக்ஸ்ஷோரூம் விலை)
This post was last modified on May 12, 2023 2:09 AM