வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள ரிவோல்ட் RV 400 எலக்ட்ரிக் பைக் உற்பத்தியை ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் சர்மா தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் முதன்முறையாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறனை பெற்றதாக வரவுள்ள ஆர்வி 400 பைக்கின் ரேஞ்ச் அதிகபட்சமாக 156 கிமீ என ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, டேங்க் போன்ற அமைப்பின் பின்னணியில் பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஆப் வாயிலாக இந்த பைக்கினை இயக்குவதற்கான முறைகள் மற்றும் சைலென்சர் ஒலி உட்பட பேட்டரி இருப்பு, மைலேஜ் சார்ந்த அம்சம் உள்ளது.
ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி எல்டிஇ ஆதரவு இ-சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகனத்தினை பற்றி பல்வேறு தகவல்களை பெற , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் சாட்டிலைட் நேவிகேஷன், பேட்டரி இருப்பு, குறிப்பிட்ட எல்லைக்குள் பைக்கினை இயக்க அனுமதிப்பது, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் நிகழ் நேரத்தில் பைக் தகவல் மற்றும் கோளாறுகளை கண்டறியும் வசதி, வாய்ஸ் கமென்ட் சிஸ்டம், சைலன்சர் செயற்கை முறையில் செயல்படும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி எல்டிஇ ஆதரவு இ-சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகனத்தினை பற்றி பல்வேறு தகவல்களை பெற , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் சாட்டிலைட் நேவிகேஷன், பேட்டரி இருப்பு, குறிப்பிட்ட எல்லைக்குள் பைக்கினை இயக்க அனுமதிக்கின்றது.
ஈக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட் என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்களை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை. முன்பாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது விற்பனைக்கு வரும் தேதியை இந்நிறுவன தலைவர் ஆகஸ்ட் 28 ஆம் தேதி என உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக விபரங்கள் பற்றி ஆர்வி400 பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்.