Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

Royal Enfield 650cc bikes on road price list 2025

சர்வதேச அளவில் 250-750சிசி பிரிவில் முதன்மையான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 650சிசி பைக்குகளான கிளாஸிக் 650, பியர் 650, சூப்பர் மீட்டியோர் , கான்டினென்டினல் ஜிடி, இன்டர்செப்டார் மற்றும் ஷாட்கன் ஆகிய பைக்குகளின் என்ஜின், மைலேஜ், மற்றும் சிறப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

தற்பொழுது 650சிசி பைக்குகளில் 6 மாடல்களின் மூலம் 97 % சந்தை மதிப்பை பெற்றுள்ளது.  இந்நிறுவனம் கூடுதலாக பல்வேறு மாடல்களை அடுத்தடுத்து புதிய மாடல்களை வெளியிட திட்டமிடுள்ளது.

2025 Royal Enfield Classic 650

கிளாசிக் 350 மாடலை தழுவியதாகவும், முந்தைய கிளாசிக் 500 இடத்தை நிரப்புவதற்காக வந்துள்ள கிளாஸிக் 650 பைக்கிலும் 650சிசி எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற நிலையில், கிளாசிக் பைக்கிற்கு உரித்தான பல்வேறு டிசைன் அம்சங்களை பெற்றதாக 4 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.

Royal Enfield Classic 650
என்ஜின் (CC) 648 cc
குதிரைத்திறன் 46.53 bhp @ 7250 rpm
டார்க் 52.3 Nm @ 5650 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 22-25 Kmpl

2025 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,99,499 முதல் ₹ 4,14,500 வரை மாறுபடுகின்றது.

2025 Royal Enfield Bear 650

இன்டர்செப்டார் 650ல் பெறப்பட்டுள்ள புதிய ஸ்கிராம்பளர் ரக பியர் 650 பைக்கிலும் 650சிசி எஞ்சினை பகிர்ந்து கொண்டாலும் மிகப்பெரிய வித்தியாசம் மற்ற 650 போல அல்லாமல் ஒற்றை எக்ஸ்ஹாஸ்ட் முறையாக மாற்றப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

Royal Enfield Bear 650
என்ஜின் (CC) 648 cc
குதிரைத்திறன் 46.53 bhp @ 7150 rpm
டார்க் 56.5 Nm @ 5150 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 22-25 Kmpl

2025 ராயல் என்ஃபீல்டு பியர் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,02,769 முதல் ₹ 4,25,565 வரை மாறுபடுகின்றது.

2025 Royal Enfield Shotgun 650

கஸ்டமைஸ்டு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களின் விருபத்தை நிறைவேற்றும் வகையில் பாபர் ரக ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 பைக் மாடலில் பேரலல் ட்வீன்  648சிசி என்ஜினை பெற்றதாக அமைந்துள்ளது.

ஸ்டென்சில் வெள்ளை, பிளாஸ்மா நீலம், பச்சை டிரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்கு நிறங்களை கொண்டுள்ள ஷாட்கன்னில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

Royal Enfield ShotGun 650
என்ஜின் (CC) 648 cc
குதிரைத்திறன் 46.53 bhp @ 7250 rpm
டார்க் 52.3 Nm @ 5650 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 22-25 Kmpl

2025 ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,26,432 முதல் ₹ 4,42,510 வரை மாறுபடுகின்றது.

202 Royal Enfield Super Meteor 650

650சிசி சந்தையில் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் தொடர்ந்து நல்ல வற்வேற்பினை இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பெற்று விளங்குகின்ற மோட்டார்சைக்கிளில் 648சிசி என்ஜின் உள்ளது. ஆஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர், மற்றும் டூரர் என மூன்று விதமான வேரியண்டில் 7 விதமான நிறங்களை கொண்டுள்ளது.

Royal Enfield Super Meteor 350
என்ஜின் (CC) 648 cc
குதிரைத்திறன் 46.53 bhp @ 7250 rpm
டார்க் 52.3 Nm @ 5650 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 24 Kmpl

202 ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 4,31,257 முதல் ₹ 4,65,664 வரை மாறுபடும்.

202 Royal Enfield Interceptor 650

650cc வரிசையில் வந்த முதல் மாடலான 650 ட்வீன்ஸ் இன்டர்செப்டார் பைக்கில் 648சிசி என்ஜின் பெற்று 7 விதமான நிறங்களை கொண்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 164 கிமீ பெற்றதாக அமைந்துள்ளது.  மாடர்ன் ரோட்ஸ்டெர் ஸ்டைலை கொண்டுள்ள  பைக் மாடல் அமோக வரவேற்பினை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெற்றுள்ளது.

Royal Enfield Interceptor 650
என்ஜின் (CC) 648 cc
குதிரைத்திறன் 46.53 bhp @ 7250 rpm
டார்க் 52.3 Nm @ 5650 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 21 Kmpl

 

202 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,62,488 முதல் ₹ 3,94,114 வரை மாறுபடும்.

202 Royal Enfield Continental GT 650

கஃபே ரேஸர் ஸ்டைலை பெற்ற கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கிலும் 648சிசி என்ஜின் பெற்று அதிகபட்சமாக 47 hp பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் இலகுவாக மணிக்கு 120 கிமீ வேகத்தை எட்டுகின்றது. இந்த பைக்கில் 6 விதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

Royal Enfield Continental GT
என்ஜின் (CC) 648 cc
குதிரைத்திறன் 46.53 bhp @ 7250 rpm
டார்க் 52.3 Nm @ 5650 rpm
கியர்பாக்ஸ் 6 Speed
மைலேஜ் 23 Kmpl

2025 ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 3,80,560 முதல் ₹ 4,09,128 வரை மாறுபடும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதானது, எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.

Onroad Price updated Date – 28/03/2025

Exit mobile version