Automobile Tamilan

மிரட்டலான கரடி.., ராயல் என்ஃபீல்டு பியர் 650 அறிமுகமானது

Royal Enfield bear 650 golden shadow

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய இன்டர்செப்டார் பியர் 650 ஸ்கிராம்பளர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் நவம்பர் 5ஆம் தேதி EICMA 2024ல் விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

Royal Enfield Interceptor Bear 650

என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி இன்ஜின் பெற்ற பிரிவில் ஐந்தாவது மாடலாக வந்துள்ள புதிய பியர் 650 ஸ்கிராம்பளர் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு கூடுதலாக 4.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.

இன்டர்செப்டார் உட்பட மற்ற 650சிசி பைக்குகளில் இருந்து வித்தியாசத்தை வழங்கும் வகையில் இரண்டு புகைப்போக்கிகளுக்கு பதிலாக ஒற்றை புகைப்போக்கி கொடுக்கப்பட்ட காரணத்தால் டார்க் உயர்ந்துள்ளது. 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,150rpm-ல் 56.5Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

184 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற பியர் 650 பைக்கின் எடை 216 கிலோ கிராம் கொண்டு முன்பக்கத்தில் 110 மிமீ  43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் பொருத்தப்பட்டு (ஒரு நிறத்தில் மட்டும் தங்க நிறத்தில்) 100/90-19 M/C 57H டீய்ப் டயருடன் 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 130மிமீ பயணிக்கின்ற டூயல் ஷாக் அப்சார்பருடன் 140/8-17 M/C 69H டயரை பெற்று 270 மிமீ டிஸ்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

டிரிப்பர் நேவிகேஷன் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆதரிவனை பெற்ற 4 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி டெயில் விளக்குகளுடன் வந்துள்ளது. மற்றபடி, இந்த மாடலில் வெள்ளை, பச்சை, வைல்ட் ஹனி, கோடன் ஷேடோ மற்றும் டூ்போர்நைன் என 5 நிறங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் நவம்பர் 5 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ராயல் என்பீல்டு பியர் 650 விலை ரூ. 3.30 லட்சம் முதல் ரூ.3.50 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version