Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக்டூ வீல் அறிமுகமானது

Royal Enfield himalayan Wire spoked Tubeless Wheels

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் தற்பொழுது ஸ்போக்டூ வீல் உடன் கூடிய ட்யூப்லெஸ் டயர் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் ரூபாய் 2.96 லட்சத்தில் துவஙகுகின்ற நிலையில் முந்தைய மாடலை விட ரூபாய் 11,000 கூடுதலாக அமைந்திருக்கின்றது.

முன்பாக ஹிமாலயன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,424 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

Himalayan 450 Spoked Tubeless tyre

திடீரென ஏற்படுகின்ற டியூப் டயர் பஞ்சர்களை சரி செய்ய சக்கரங்களை கழட்டி பின்பு டியூப் நீக்கி பஞ்சரை சரி செய்வதற்காக சிக்கல்களுக்கு மாற்றாக தான் டியூப்லெஸ் டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டன ஆனாலும் ஸ்போக்டூ வீல் பைக் மாடல்களில் பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்கள் தற்பொழுது வரை பரவலாக கொடுக்கப்படவில்லை, என்றாலும் கூட தற்பொழுது சில பிரீமியம் பைக்கில் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு பிரிமியம் பைகளை மட்டுமே இடம்பெற்று இருக்கின்ற இந்த வசதியானது தற்பொழுது ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளின் அட்வென்ச்சர் ரக மாடல் ஹிமாலயன் பைக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய அளவில் விலையை அதிகரிக்காமல் வெறும் பதினோராயிரம் ரூபாய் மட்டுமே உயர்த்தி இந்த டியூப்லெஸ் டயர்களை இந்நிறுவனம் கொண்டு வந்திருக்கின்றது.

மற்றபடி எவ்விதமான மெக்கானிக்கல் மற்றும் இன்ஜின் தொடர்பான எந்த ஒரு மாற்றங்களும் இல்லை சமீபத்தில் தான் வெளியான இந்த 450சிசி இன்ஜின் பெற்ற இந்த மாடல் மிகச் சிறப்பான வரவேற்பினை அட்வென்ச்சர் சந்தையில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

RE Himalayan 450 Spoked Tubeless Price list

(ex-showroom TamilNadu)

452cc என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version