Automobile Tamilan

நவம்பர் 7.., ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 விற்பனைக்கு அறிமுகம்

royal enfield-himalayan 452

முதன்முறையாக லிக்யூடு கூல்டு என்ஜின் பெற உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 452 பைக்கின் படங்கள் உட்பட அறிமுக தேதி, என்ஜின் விபரம் என பல முக்கிய தகவல்கள் தற்பொழுது வரை வெளியாகியுள்ளது.

முதல் ஹிமாலயன் 452 அட்வென்ச்சர் பைக்கின் உற்பத்தியை துவங்கியுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், விற்பனைக்கு அறிமுக செய்த உடனே டெலிவரி துவங்க உள்ளது.

RE Himalayan 452

அனைத்து சாலைகளுக்கும் ஏற்ற அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 452 பைக் அதிகபட்சமாக 40 hp பவரை வெளிப்படுத்துகின்ற 451.65cc லிக்யூடு கூல்டு என்ஜின்  பொருத்தப்பட்டு 39-43 Nm வரை டார்க் வெளிப்படுத்தலாம். இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் கொண்டிருக்கலாம்.

ஹிமாலயன் 452 பைக்கின் முன்பக்கத்தில் 21 இன்ச், பின்புறத்தில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டு பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு 196 கிலோ எடை கொண்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற ஹிமாலயன் 411 மாடலை விட மூன்று கிலோ வரை எடை குறைவாக அமைந்துள்ளது. காமேட் வெள்ளை என்ற நிறம் இங்கே படத்தில் உள்ளது.  ஹிமாலயனின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ ஆக இருக்கலாம்.

வட்ட வடிவத்தை பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளதால், ப்ளூடூத் இணைப்பு மூலம் டிரிப்பர் நேவிகேஷன் வழங்கப்பட உள்ளது. டிரிப் மீட்டர், டேக்கோமீட்டர் என அனைத்தும் டிஜிட்டலாக ஒழங்கப்பட்ட உள்ளது.

வரும் நவம்பர் 7 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் அட்வென்ச்சர் விலை ரூ.2.60 லட்சம் முதல் ரூ.2.75 லட்சத்துக்குள் விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

Exit mobile version