இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற அதிக ரேஞ்சு வழங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சிம்பிள் ஒன் சிங்கிள் சார்ஜில் 236 கிமீ ரேஞ்சு வழங்கும் என கூறப்படுகின்றது. ஓசூர் அருகே சூளகிரியில் அமைந்துள்ள ஆலையில் முதல் ஒன் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் தொடர்ந்து உற்பத்தி ஆலை துவங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக டெலிவரி வழங்கப்படாமல் இருந்தது.
வரும் மே 23 ஆம் தேதி அதிகார்ப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளதால் விரைவில் டெலிவரி துவங்க உள்ளது. 8.5 kW மின்சார மோட்டார் அதிகபட்சமாக 11 bhp பவர் மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது.
குறைந்த விலையில் வரவுள்ள 4.8 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கிமீ வரை ரேஞ்சு வழங்கும். அடுத்து ஸ்வாப்பிங் பேட்டரி பேக் கொண்டுள்ள வேரியண்ட் அதிகபட்சமாக 300 கிமீ வரை வழங்கும்.
0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.95 விநாடிகளை எடுத்துக் கொள்ளும் ஒன் மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும்.
மேலும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்தாக விளங்கலாம்.