ரூ. 86,700 விலையில் சுசூகி அவெனிஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

125சிசி ஸ்கூட்டர் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடலாக அவெனிஸ் விளங்கும் வகையில் சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பர்க்மென் ஸ்ட்ரீட், அக்செஸ் 125 மாடல்களை வரிசையில் 125சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்டைலிஷான டிவிஎஸ் என்டார்க் 125 மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அவெனிஸ் ஸ்கூட்டரின் வடிவமைப்பு இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

சுசூக்கி Avenis ஸ்கூட்டர்

அவெனிஸ் ஸ்கூட்டரின் சேஸ் மற்றும் இன்ஜினை பொருத்தவரை விற்பனையில் உள்ள அக்செஸ் 125 மாடலை பகிர்ந்து கொள்கிறது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ள மாடலில்  12-இன்ச் முன்புற வீல் மற்றும் 10-இன்ச் பின்புற வீலை கொண்டுள்ளது.

அவெனிஸை இயக்குவதற்கு 125சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 6,750ஆர்பிஎம்-ல் 8.7 HP பவரையும், 5,500ஆர்பிஎம்-ல் 10 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

அவெனிஸ் மாடலில் இன்ஜின் கில் சுவிட்ச், சைடு ஸ்டாண்ட் இன்டர்லாக், டூயல் லக்கேஜ் ஹூக்குகள், இருக்கைக்கு அடியில் சேமிப்பு வசதி, USB சார்ஜர் வசதியுடன் மிக முக்கியமாக ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் அறிவிப்புகள், அழைப்பாளர் ஐடி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Suzuki Avenis –

Variant Price
Ride Connect Edition Rs. 86,700/-
Race Edition Rs. 87,000/-

Prices are ex-showroom, Delhi

Share