புரோஸ்டேட் புற்றுநோய் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஜென்டில்மேன் ரைடு இந்தியாவில் ஏற்பாடு: ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் இந்தியா அறிவிப்பு

கடந்த செப்டம்பர் 30ம் தேதி அதிகாலையில் 5-வது ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் ஜென்டில்மேன் ரைடு தொடங்கியது. இதில் 1500 ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இந்த ரைட்டின் முக்கிய நோய்க்கமே, ஆண்களின் ஆரோக்கியம் குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் ஆண்களின் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதேயாகும்.

இதுகுறித்து பேசிய ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் இந்தியா ஜெனரல் மேனேஜர் ஷோப் ஃபாரூக், புரோஸ்டேட் புற்றுநோய் உலகின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தாண்டு ரைடு நிகழ்வின் மூலம், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் சேகரிக்கப்படும் நிதியை, புரோஸ்டேட் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அளித்து மில்லியன் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்து, பங்கேற்க வேண்டும் என்று அனைவரும் அழைப்பு விடுக்கிறேன். இந்த ஜென்டில்மேன் ரைடு, இந்த விழிபுணர்வு பிரச்சாரத்தை வெற்றி பெற செய்வதுடன், இதில் பங்கு பெறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு தங்கள் மிக்ச்சிறந்த காரணத்திற்காக பயணம் செய்த அனுபவத்தை அளிக்கும் என்றார்.

ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் பெரிலவிலான கிளாசிக் வகைகளுடன் வெளியான மோட்டார் சைக்கிள் ஆகும். இதில் போனேவில்வில் சீரிஸ், ஸ்ட்ரீட் ட்வின், டி 100, டி 120, பாபர், ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர், ஸ்பீட்மாஸ்டர் மற்றும் ட்ரூக்ஸ்டன் ஆர் வகை மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்றன.

புகழ்பெற்ற ஜென்ட்மேன் ரைடு நிகழ்வின் தொடக்க விழாவில், பல்வேறு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரை பொருத்து பல்வேறு த்ளைபுகுள் அளிக்கப்பட்டன. அவை, மிகவும் புகழ்பெற்ற தம்பதிகள், மிகவும் புகழ்பெற்ற ஜென்டில்மேன்கள், மிகவும் புகழ்பெற்ற பெண்கள், மிகவும் புகழ்பெற்ற மீசைகாரர்கள், மிகவும் புகழ்பெற்ற தாடியை வைத்திருப்பவர்கள் மற்றும் மிகவும் புகழ்பெற்ற ஜூனியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இந்த விழிப்புணர்வு ரைட்டின் மூலம் சேகரிக்கப்படும் நிதி, உலகின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனமான மோவம்பர் நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

Exit mobile version